Posts

Showing posts from April, 2020

book- புயலின் மையம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ புயலின் மையம் (ராஜம் கிருஷ்ணன்) ______________________________         கோவாவின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை அவர் திரட்டிய போது கேட்டறிந்த தகவல்கள் அவரை திடுக்கிடச் செய்தன.         போர்ச்சுக்கீசிய தனியறைக் கொடுமைகளால் மனிதமனம் பாதிப்படைந்தது பற்றிய விவரங்கள் இந்நூல் உருவாக்கப் பணித்தன.        சிறைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் (இராஜகோபாலன்) விடுதலைக்குப் பாடுபட்டவன்.நிலைகுலைந்து போகிறான்.        இத்தருணத்தில் அவன் மனைவியான காத்யாவின் நிலை, தாயார் படும் வேதனை என இவர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடுகளை சித்தரிக்கிறார் ஆசிரியர்.                  (விலை : ரூ 200)                  (பிரக்ஞை பதிப்பகம்)

GK

மராட்டிய மன்னர் சிவாஜியின் குருவாகக் கருதப்படுபவர் யார்? தாதாஜி கொண்டதேவ்  விளக்கம்: தாதாஜி கொண்டதேவ் தான் சிவாஜிக்கு போர் வித்தைகளை கற்றுக் கொடுத்த குரு. பிற்காலத்தில் சிவாஜி குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

GK

இந்திய சிவில் சர்வீஸின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? காரன் வாலிஸ் விளக்கம்: திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் எளிமை தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார்.

Book- தூர்வை

தினம் ஒரு புத்தகம் ___________________________ தூர்வை (சோ.தர்மன்) ____________________________        இப்புதினத்தை வாசிக்கும் போது அந்தக் கதைக் களத்தில் கரிசல் காட்டின் வெம்மையும், நீர்மையும் நம் மேல் அப்பிக்கொள்ளும்.கதையில் நாம் மயங்கிக் கிடப்போம்.        கரிசல் பூமி, கந்தகபூமியான கதை .விவசாயத்தை விட்டு சம்சாரி, தீப்பெட்டித் தொழிற்சாலையின் காவலாளியாய் போனதை இயல்பாய், அழகாய், காட்டோடை போல சிலுசிலுத்து நம்மை ஈர்க்கும் கதை.        கதையைப் படித்து நெடுநாள் ஆனாலும், மினுத்தான் - மாடத்தி தம்பதிகள் நம் மனதைவிட்டு அகலுவதில்லை.        விவசாயக் குடும்பங்கள் மாடத்தில் அமர்ந்து கதையளப்பது, சிலம்பம் பழகுவது, ஒயில் கும்மியாடுவது, அதையும் தாண்டி நேர்த்திக்கடன் தீர்க்க, வண்டிகட்டி குடும்பம் குடும்பமாக போவது இதையெல்லாம் படிக்கும் போது காலம் மாறிப் போனதை எண்ணி மனம் ஏங்கும்.        வாசிக்க வாசிக்க கரும்புச்சாறு போல் ஈர்க்கும் சொல்நடை நம் மனதை மயக்கும்.மாற்றங்கள் எல்லாம் ஏற்றங்களை நோக்கி மட்டும் அல்ல என்று ...

GK

கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம் எது? சாரநாத் விளக்கம்: சாரநாத் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 13 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார். 

Book - காவிரி கரையில் அப்போது

தினம் ஒரு புத்தகம் ______________________________ காவிரிக்கரையில் அப்போது (தங்க.ஜெயமோகன்) _______________________________        கட்டுரைகளில் இருப்பவை 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரை பண்பாட்டின் விவரங்கள்.        "இப்படியெல்லாம் இருந்தது அப்போது "என்று துவங்கும் விவரிப்புக் குரலின் தவிப்போடு, காவிரிப் படுகையின் வித்தார மொழியிலியே பேசும் அனுபவச் சித்திரங்கள் இந்தக் கட்டுரைகள்.        அன்றைய நினைவுகள் இன்றைய நிலவரத்தை விளித்து நடத்தும் செரிவான உரையாடலாகக் கட்டுரைகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.                 (விலை :ரூ 180)                 (க்ரியா வெளியீடு)

Book- நந்தி ரகசியம்

தினம் ஒரு புத்தகம் ____________________________ நந்தி ரகசியம் (இந்திரா சௌந்தரராஜன்) _____________________________       இந்நூலில் நந்தி ரகசியம் என்ற புதினமும், "பொக்கிஷத்தின் சாவி " என்ற புதினமும் இடம்பெற்றுள்ளன.       இதில் "நந்தி ரகசியம் " பக்குவமாக அமைந்த சமையல் போல, வெகு நன்றாக அமைந்த புதினம்.கிராமத்துக் களத்தில் காணப்படும் ஒரு அழகிய பக்திக்களம். இதன் முகப்புச் செய்திகள் சத்தியமான உண்மைகள்.         "பொக்கிஷத்தின் சாவி " சரித்திரப் பின்புலத்தில் எழுதப்பட்ட மர்ம நாவல். இரண்டுமே விறுவிறுப்பானவை. வாசகர்களால் வெகுவாக வரவேற்கப் பட்டவை.                 (விலை : ரூ 100)                 (திருமகள் நிலையம்)

Book - கொம்மை

தினம் ஒரு புத்தகம் ____________________________ கொம்மை (பூமணி) _____________________________      மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து, மறுகுரலில் மக்கள் மொழியில் புனையப்பட்ட பெரும் புதினம்.      யமுனையில் படகோட்டிச் சேவை செய்த சத்தியவதி, ஆணாதிக்கத்தால் அலைகழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த அம்பை, தன்னை செயற்கைக் குருடாக்கி, இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைபிடித்த காந்தாரி, விலைக்கு வாங்கப்பட்ட மாதுரி இன்னும் எத்தனையோ அபலைகள் பற்றி பேசும் நூல் இது.        600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில் மக்கள் மொழியில் உணர்ச்சிப் பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் ஆசிரியர்.                (விலை :ரூ 555)                 (டிஸ்கவரி புக் பேலஸ்)     

Book - நெஞ்சில் ஒரு முள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ நெஞ்சில் ஒரு முள் (மு.வரதராசனார்) _______________________________       அறியாமல் தவறு செய்துவிட்டு பின்னர் திருந்தி வாழும் முயற்சியில் ஈடுபட்ட நல்லவள் ஒருத்தியின் வாழ்வை விவரிக்கும் நூல்.       மு.வ வின் புதினங்களில் நீண்ட புதினம் இது எனலாம். கெட்டது எப்படியும் அழிந்துவிடும் என்பதை உணர்த்தும் புதினம்.         நல்ல உயிர்கள் அழிவது, மலர் மலர்ந்து மணம் கமழ்ந்த பிறகு வாடி உதிர்ந்து அழிவதைப் போன்றது.அதற்காக வருந்த வேண்டியதில்லை. வாடி உதிர்ந்த மலர் அழுகி மறுபடியும் செடிக்கு உரமாகும்.அதுபோல் நல்லோர் வாழ்ந்து அழிவது, நன்மைகள்  மறுபடியும் தழைப்பதற்கே .         இது போன்ற வாழ்வியல் கருத்துகள் பலவற்றை உள்ளடக்கியது. அரிய தகவல் பெட்டகம் இந்நூல்.                (விலை : ரூ 180)                (பாரி நிலையம்)

Book - உள்ளே வாருங்கள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ உள்ளே வாருங்கள் (இரா.சரவணமுத்து) _______________________________      மனம் மாயக்குகை. எல்லாச் செயல்பாடுகளுக்கும் மனமே காரணம்.      மனம் என்னும் மந்திரச்சாவியைக் கொண்டு, உள்ளக் கோயிலைத் திறந்து உள்ளிருக்கும் ஒளி இறையை வழிபடும் சிலவற்றை வகைப்படுத்தும் வண்ணம் அமைத்து கற்போருக்கு உவகை ஊட்டும் வகையில் அமைத்துள்ளார்.         நுட்பமான மனத்தின் இயல்புகளை உணர்ந்து அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.        அகம் சார்ந்த உணர்வுகளைப் புறச் செயல்களுடன் புரிந்து கொள்ள வைக்க முயன்று, வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர்.                (விலை : ரூ 50)                (நாம் தமிழர் பதிப்பகம்)

Book - இந்த நாள் இனிய நாள்

தினம் ஒரு புத்தகம் _______________________________ இந்த நாள் இனிய நாள்.. (சுகி.சிவம்) ________________________________       24 கட்டுரைகள் அடங்கிய ஓர் அறிவுப் பெட்டகம். புத்தக ஆர்வலருக்கு இந்நூல் ஓர் அருமையான உந்துசக்தி. ஆற்றலுடன் செயல்பட நினைப்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி.        சன் தொலைக்காட்சியில் விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இனிய நிகழ்வாக சுகி.சிவம் அவர்களின் சொல்லமுதைக் கேட்டு, பார்த்து ரசித்த ஆயிரக்கணக்கான அன்பு வாசகர்களின் "வாசிப்பு "  ஆர்வத்திற்கு ஏதுவாக இந்நூல் வெளிவந்துள்ளது.      பெட்டகத்தைத் திறந்திடுங்கள்.இவ்வழிகாட்டியின் துணை கொண்டு ஆற்றலுடன் செயல்படுங்கள்.                  (விலை : ரூ90)                  (கவிதா பப்பிளிகேஷன்)

நாலடியார்

🔥 நாலடியார்🔥 இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு. தெளிவுரை : இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

Book - ஒரு முறை தான் பூக்கும்

தினம் ஒரு புத்தகம் ____________________________ ஒரு முறைதான் பூக்கும் (ஸ்டெல்லா புரூஸ்) _____________________________         சிறுவயதில் தாயை இழந்த கதாநாயகன் (வைத்திய நாதன்)   மனதில் ஒரு எண்ணம்.          தான் காப்பாற்றும் விதத்தில் ஒரு பெண் இல்லாமல், தன்னைக் காப்பாற்றும் பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்று நினைக்கிறான்.குற்றாலத்தில் இருந்து சென்னை வருகிறான்.         அவன் கனவு கண்ட கற்பனைப் பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வருகிறாள். அவளை தன்வயப்படுத்த பல முயற்சிகள் செய்கிறான்.         அந்த அலுவலகத்திலேயே, வாய் பேச முடியாத ஒரு பெண் (ஆனந்தி) வைத்தியநாதனை விரும்புகிறாள்.       இந்த முக்கோணக் காதலில் யாருடைய காதல் வெற்றியடைகிறது என்பதை விவரிக்கும் விதம் தான் புதினத்தின் வெற்றிக்கு அடித்தளம். ஆசிரியரின் முதல் நூல்... ஆச்சரியப்பட வைக்கும் நூல்.. வாசியுங்கள்..                     (விலை : ரூ 50)           ...

GK- Certificate

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSem17Ae5uHjXvUgpsD1YxhWJTilDmZQMjOv-_Eaelpb2-eulw/viewform?usp=sf_link

GK

Number of verbal and picture tests in Torrance creativity test are respectively  a. 5, 3 b. 6, 2 c. 7, 2 d. 7, 3  Answer is b. 6, 2

GK

Army alpha test is a  a. Performance test b. Verbal test  c. Non – verbal test d. Culture fair test  Answer is b. Verbal test

Silence

Image

GK

How many syllables are there in the word ‘examination’?  a) 4 b) 3 c) 5 d) 6 Answer is c) 5. 

GK

Choose the following sentences by supplying appropriate connecting words from the options listed below:  I met a boy _____ told me _____ I could find you.  a) who, were b) that, were c) that, where d) who, where Answer is d) who, where

GK

Identify the most suitable explanation for the idiom used in the sentence given below:  The boy backed up his friend’s claim  a) accepted b) supported c) explained d) denied Answer is b) supported

GK

Has there been any _______ on the strike from the Government?  a) reaction b) response c) comment d) criticism Answer is b) response

GK

I assure you I have wish to _______ my responsibility.  a) shirk b) refuse c) abandon d) disobey Answer is a) shirk

GK

The receptionist _____ to ring another hotel to see if they had a room  a) offered b) suggested c) recommended d) invited Answer is b) suggested

GK

My landlady was very _____ when I met with an accident  a) merciful b) pitiful c) sympathetic d) hearty Answer is c) sympathetic

Book வாழ்வியல் சிந்தனைகள்

தினம் ஒரு புத்தகம் _____________________________ வாழ்வியல் சிந்தனைகள்  (தொகுதி 11) கி.வீரமணி ______________________________        ஆசிரியர் அவர்கள், அவ்வப்போது தனது சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை "விடுதலை " நாளிதழில் பதிவு செய்து வந்தார்.        இந்த 11 வது தொகுதியில், மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும், இங்கர்சாலின் இன்ப வாழ்வியல், இதய நோயாளிகள் கவனிக்க - பின்பற்ற உள்பட 85 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.         மகிழ்ச்சி, எளிமை, தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்றவைப் பற்றிய அறிவார்ந்த கருத்துகளும், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, காண்டேகர் போன்ற தலைவர்கள் - சிந்தனையாளர்களின் வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கட்டுரைகளும் வாசிப்பவரை யோசிக்க வைப்பவையாக உள்ளன.                   (விலை : ரூ 180)   (பெரியார் சுயமரியாதை பிரச்சார               நிறுவன வெளியீடு)

மூதுரை

மூதுரை _____________________ நற்தா மரைக்கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா  மூக்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். பொருள் _______________________       குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களை கற்றவர்களே விரும்பிச் சேர்வர்.சுடுகாட்டில் பிணத்தைக் காக்கை  விரும்புவது போல கல்வி அறிவில்லா மூடரை மூடர்களே விரும்புவர்.

Book இளமையில் வெல்

தினம் ஒரு புத்தகம் ____________________________ இளமையில் வெல் (சைலேந்திரபாபு I P S) _____________________________         வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள இளைஞர்கள் இதயத்தில் தன்னம்பிக்கையை விதைக்கும் நூல்.        இளைஞர்களை ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்கும் வகையில், அவர்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் சைலேந்திரபாபு அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.        தினத்தந்தியில் இளைஞர் மலரில் வெளிவந்த போது லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.        இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் கலங்கரைவிளக்கம் இந்நூல்.                (விலை : ரூ 120)                (தினத்தந்தி பதிப்பகம்)

நாலடியார்

🔥நாலடியார்🔥 கண்டு நீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்  வேண்டார் மன் தீய வீழைபயன் நல்லவை  வேண்டினும் வேண்டா விடினும்  உறற்பால  தீண்டா விடுதல் அரிது.  தெளிவுரை : நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தில் எவரேஆயினும் சிறிதளவும் துன்பந் தரும் தீயவற்றை விரும்பார். விரும்பத்தக்க நற் பயன் தரும் நல்லவற்றையே விரும்புவர் எனினும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்தடையக் கூடிய இன்ப துன்பங்களை அவரவர் அடையாமல் தப்புவது இல்லை.

Book நெல்சன் மண்டேலா

தினம் ஒரு புத்தகம் ______________________________ நெல்சன் மண்டேலா (தா.பாண்டியன்) _______________________________        தேச விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த சிறப்பும், அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பதவியைத் துறந்த சிறப்பும் நெல்சன் மண்டேலாவுக்கு உண்டு.         வாழ்க்கை வரலாறு நாட்குறிப்புகளின் தொகுப்பு அன்று. அனுபவங்களின் பதிவு. மண்டேலாவின் வாழ்க்கை நிகழ்வுகள், மனப் போராட்டங்கள், தீர்வுகளை எதிர் நோக்கிய பதட்டங்கள், ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் போன்ற விலைமதிப்பற்ற பாடங்கள் மனித சமுதாயத்திற்குத் தம்முள் குவிந்து நிற்கும் பொருண்மை வாய்ந்தவை.         மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு அன்று. மனித சமுதாயத்தின் நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு.        எளிய நடையில் ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள்.                (விலை : ரூ 260)             ...

Book மீண்டும் பெண் மனம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ மீண்டும் பெண்மனம் (லட்சுமி) ______________________________        ஆசிரியர் எழுதிய "பெண்மனம் " புதினம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது.         அப்புதினத்தின் தொடர்ச்சிதான் "மீண்டும் பெண்மனம் " புத்தகம்.பெண்மனம் புதினத்தில் ஜெகநாதன், சந்திரா ஆகிய இருவர் உள்ளங்களும் புரிந்து கொள்ளமுடியாது, நாளாக நாளாக இருவர் மனமும் ஒன்றுபடும்.           பெண்மனம் கதையில், சந்திராவின் உள்ளத்தை தந்தை கல்யாணராமரும், சித்தி பார்வதியும் அறிய முடியாமல் தவிப்பர்.         இந்த கதையில் தாய் சந்திரா, தந்தை ஜெகநாதன், காதலன் சுகுமார் மூவரும் வீணாவின் மனதை அறிந்து கொள்ள முடியாது தவிக்கிறார்கள்.          இரு தலைமுறையினரின் இடைவெளிகள், கலாச்சார வேறுபாடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.                  (விலை : ரூ 100)   ...

GK

Verbal guidance is least effective in the learning of  a) attitudes b) Relationships c) Skills d) Facts Answer is c) Skills

GK

If a medal is an award made of gold, silver or bronze, choose the homophone for the word which means  a) meddle b) muddle c) middle d) medel  Answer is a) meddle

GK

What is the full form of USB as used in computer related activities? a) United Serial Bus b) Ultra Security Block c) Universal Security Block d) Universal Serial Bus  Answer is d) Universal Serial Bus

GK

விண்வெளி வீரர்கள் ஆக்சிஜென் பெற உதவும் பாசி எது? குளோரெல்லா  விளக்கம்: விண்வெளி வீரர்கள் ஆக்சிஜென் பெற உதவும் பாசி "குளோரெல்லா" என்று அழைக்கப்படும்.

GK

ரயில்வே ஸ்லீப்பர்கள் பெரும்பாலும் எந்த மரத்தால் ஆனவை? சால் மரம்  விளக்கம்: ரயில்வே ஸ்லீப்பர்கள் பெரும்பாலும் "சால் மரத்தால்" ஆனவை.

GK

"சிர், ஸ்புரூஸ், ஃபர் மரங்கள்" பெரும்பாலும் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? மருந்து மற்றும் காகிதம் தயாரிக்க  விளக்கம்: "சிர், ஸ்புரூஸ், ஃபர் மரங்கள்" பெரும்பாலும் மருந்து மற்றும் காகிதம் தயாரிக்கவே பயன்படுகின்றன.

மூதுரை

மூதுரை ______________________ கற்பிளவோடு  ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம். பொருள் _____________________     சிறு வேறுபாடு வந்தாலே சிறியோர் பிளந்து போட்ட கல்லைப் போல பிரிந்து விடுவர்.பெரியோர், பெரும் சினத்தால் பிரிந்தாலும் பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம் ஒருவர் எய்த அம்பில் நீரில் உண்டான வடுவைப் போன்றதே ஆகும்.

Book சாகாவரம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ சாகாவரம் (வெ.இறையன்பு) _____________________________       சீராக இயங்கும் மனித வாழ்வில் எதிர்பாராத துன்பம் நேர்ந்தால் சீர்மையின் தன்மையில் சலனம் தோன்றும்.புதிய சிந்தனைகள் தோன்றும்.       இக்கதையின் தலைவனுக்கு நெருங்கியவர்கள் அடுத்தடுத்து திடீர் மரணமடைந்ததால் அமைதி குலைகிறது.ஒவ்வொன்றும் அவருக்கு முரணாகத் தெரிகிறது. எது நிலையானது, எது மறையக்கூடியது என்று அறிந்து சிந்திக்கத் துவங்குகிறார்.         அவரது இளமை தொட்டு இறுதிப்பயணம் வரையில் அவருடைய உணர்வு பொங்குதலை அணுஅணுவாக விவரிக்கிறார் ஆசிரியர்.        தத்துவார்த்தமாக நகரும் கதையோடு வாழ்க்கைக்கான ஒரு தேடலின் அர்த்தத்தை அல்லது ஒரு விடையை நம்முன் வைக்கிறார் ஆசிரியர். அனைவரின் வீட்டு அடுக்கறை (அலமாரி)யிலும்  இருக்க வேண்டிய அற்புதமான நூல்.                 (விலை : ரூ 110)                 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

GK

உணவாகப் பயன்படும் பூஞ்சை எது? அகாரிகஸ்  விளக்கம்: உணவாகப் பயன்படும் பூஞ்சை அகாரிகஸ் எனப்படும். இதனைக் காளான் என்றும் கூறுவர். மனிதர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது.

Book தமிழ் இன்பம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ தமிழ் இன்பம் (ரா.பி.சேதுபிள்ளை) _____________________________        உரைநடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் திரு.வி.க, சேதுபிள்ளை  இவர்களின் செந்தமிழைச் செவி மடுக்க வேண்டும்.       இந்நூலில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும்.       மேடைப் பேச்சு எப்படி இருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும்.எட்டுத் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்து கட்டுரைகள் வீதம் 40 கட்டுரைகள் உள்ளன.      கண்ணகி கூத்து, தமிழும் சைவமும், கர்ணனும் கும்பகர்ணனும், அறிவும் திருவும், காளத்தி வேடனும் கங்கை வேடனும் முதலிய கட்டுரைகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாது இனிக்கும். "வாழிய செந்தமிழ்!வாழ்கநற் றமிழர்!  வாழிய பாரத மணித்திரு நாடு "                   (விலை : ரூ 60)                   (சீதை பதிப்பகம்)

Book தண்ணீர் தேசம்

தினம் ஒரு புத்தகம் ____________________________ தண்ணீர் தேசம் (கவிப்பேரரசு வைரமுத்து) ____________________________       இது உவமைகளின் தேசம்.  கற்பனை நதிகள் பல கலந்த தேசம். வாழ்க்கையின் நியாய அநியாயங்களை வேரறுத்த தேசம். ஆக்ஸிஜனுடன் நம்பிக்கையையும் சுவாசித்தால் மரணத்தையும் வென்று விடலாம் என்றும்,  அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை என்றும் பாடம் நடத்திய தேசம்.       நட்புக்கு 100 சதவிகித அர்த்தம் சொல்லும் நேசங்கள் வாழ்ந்த தேசம். பல அறியாத அறிவியல் புதிர்களை அழகிய தமிழில் மொழி பெயர்த்த தேசம்.        கடலை பலவாறு விவரித்து வியந்த தேசம். "கடல் அது ஒரு தனி உலகம். பள்ளி கொண்ட விஸ்வரூபம்.. கவிஞர்களின் கனா.. முத்துகளின் கர்ப்பப்பை.. பவளங்களின் தொட்டில்.. கலங்கள் நகரும் திரவத்திடல்.. விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடம்.. ஞானிகளின் தத்துவம்.. அடுத்த நூற்றாண்டு உணவுத்தேவையின் அமுதசுரபி .. இது வியப்பின் விலாசம்.. பூமாதேவியின் திரவச்சேலை.."       மொத்தத்தில் தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம்..         வாசிப்பை நேசிக்கச்...

GK

எள்ளில் இருந்து எந்த முறையில் நல்லெண்ணெய் பெறப்படுகிறது? குளிரழுத்த முறை  விளக்கம்: எள்ளில் இருந்து குளிரழுத்த முறையில் நல்லெண்ணெய் பெறப்படுகிறது.

Mind

Image

Life

Image

GK

ஆஞ்சியோ ஸ்பெர்ம் மரங்களிலேயே மிகப் பெரியது எது? யூகலிப்டஸ்  விளக்கம்: ஆஞ்சியோ ஸ்பெர்ம் மரங்களிலேயே மிகப் பெரியது "யூகலிப்டஸ்" ஆகும்.

மூதுரை

மூதுரை ________________ ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். பொருள் _______________     ஆழமாகிய கடலின் நீரை, அழுத்தும் படியாக அமிழ்த்தி அளந்தாலும் ஒரு படியானது, நான்கு படி நீரை முகவாது.அதுபோல தோழியே! பெண்களுக்கு, மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், அவரவருடைய ஊழ்வினையாகிய பயனே அனுபவிக்கப்படும் பயனாகும்..

book வந்தார்கள் வென்றார்கள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ வந்தார்கள்..வென்றார்கள்! (மதன்) ______________________________        ஜீனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த போது பலருடைய பாராட்டைப் பெற்ற தொடராக அமைந்தது.       தைமூரின் படையெடுப்பு, பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினி இவர்களில் ஆரம்பித்து, பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பகதூர் ஷா வரை சொல்லப்பட்ட இந்த வரலாறு சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம் சிலிர்க்க வைக்கிறது.       ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது.        இந்நூலில் ஆங்காங்கே நிகழும் உரையாடல்கள் மட்டும், இப்படித்தான் பேசியிருக்க முடியும் என்ற யூகத்தின் அடிப்படையில் கற்பனையில் எழுதியதாகவும், மற்றபடி ஒவ்வொரு வரியும் வரலாற்றில் உண்மையில் நடந்ததாக ஆசிரியர் கூறியுள்ளார்.      இப்புத்தகத்தைப் வாசிக்கும் ஒவ்வொருவரும், வாசித்து முடிக்கும்வரை மொகலாய மன்னர்கள் காலத்தில்தான் வாழ்...

மூதுரை

மூதுரை ________________ பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமஞ் செயல். பொருள் _________________ உமி நீக்கவதற்கு முன்னே முளைப்பது அரிசியேயாயினும், உமி நீங்கிப் போனால் முளையாது.அதுபோல பெரிய வல்லமை உடையவர்க்கும் துணைவலி இல்லாமல், எடுத்துக் கொண்ட செயலை செய்து முடித்தல் இயலாது.

Book மரபும் புதுமையும்

தினம் ஒரு புத்தகம் _____________________________ மரபும் புதுமையும் (தொ.பரமசிவம்) _____________________________          நிறுவனமனமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கி, கெட்டியாகிக் போன மரபுகளுக்கு மாறாக நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து உரைப்பவை தொ.ப வின் ஆய்வுகள்.          ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் காட்டுகின்றன.         பண்பாட்டு மரபைப் பேணும் அதே வேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு, இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.               (விலை : ரூ 100)               (காலச்சுவடு பதிப்பகம்)

Book ஒரு வழி பாதை

தினம் ஒரு புத்தகம் _____________________________ ஒருவழிப் பாதை (சு.சமுத்திரம்) ______________________________          கிராமிய சூழ்நிலையில் கதை சொல்வதில் வல்லவரான சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய 16 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது.         அனைத்து கதைகளும் சமுதாயத்தில் நிகழும் பல கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதும், அவை தற்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதும் சிறப்பு.        பல்வேறு காலகட்டங்களில், பல இதழ்களில் வெளியான சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து தரப்பட்டிருப்பதால் அனைத்துக் கதைகளையும் ரசித்துப் படிக்க முடிகிறது.        இக்கதைகளில் உலாவிய கதாப்பாத்திரங்கள் நமது மனதை சுற்றிக் கொண்டே இருப்பது இக்கதைகளின் சிறப்பு.              (விலை : ரூ 90)              (பாலாஜி பதிப்பகம்)

GK

"ஹாரிபாட்டர்" என்ற நாவலை எழுதியவர் யார்? ஜே. கே. ரவ்லிங் விளக்கம்: "ஹாரிபாட்டர்" என்ற நாவலை எழுதியவர் "ஜே. கே. ரவ்லிங்" என்பவர் ஆவார். இவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்.

GK

"Gone With The Wind (கோன் வித் தி விண்ட்)" என்ற ஆங்கில நாடகத்தை எழுதியவர் யார்?  மார்கிரேட் மிட்சல் விளக்கம்: "Gone With The Wind (கோன் வித் தி விண்ட்)" என்ற ஆங்கில நாடகத்தை எழுதியவர் "மார்கிரேட் மிட்சல்" என்பவர் ஆவார். இவர் ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்று அறியப்படுகிறார்.

GK

"The Godfather (தி காட் ஃபாதர்) என்ற ஆங்கில நாவலை எழுதியவர் யார்? மரியா புஸோ  விளக்கம்: "The Godfather (தி காட் ஃபாதர்) என்ற ஆங்கில நாவலை எழுதியவர் "மரியா புஸோ" என்பவர் ஆவார். இதனை 1969 இல் எழுதினார். இவர் ஒரு அமெரிக்கர் ஆவார்.

Book தேன்மழை

தினம் ஒரு புத்தகம் ________________________________ தேன்மழை (உவமைக்கவிஞர் சுரதா) ________________________________       உவமைகளின் கலைக் களஞ்சியம் .. கவிஞரின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தமிழ்ப் புரவி .. தமிழ்க் கரும்பிலிருந்து பிரித்தெடுத்த புத்தம்புது சாறு ..       புதிய கருத்துகளின் புதிய செய்யுள் வடிவத்தையும் இந்நூலில் காணலாம்.இனிமை, எளிமை, உவமை நிறைந்து காணப்படும் அற்புதமான கவிதை நூல் இது.    நிலா.... __________ மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே - வெள்ளி முத்திரை மிதக்குது பார் மேலே - மதி வெட்டவெளி மீதினிலே வெற்றி மன்னன் வெண்குடை போல் விரியும் - நகை புரியும்!                 (விலை : ரூ 40)                 (சீதை பதிப்பகம்)      

Book காரல் மார்க்ஸ்

தினம் ஒரு புத்தகம் ________________________________ காரல் மார்க்ஸ் (சாமிநாதசர்மா) _________________________________      மார்க்ஸை மையமாக வைத்துக் கொண்டு அவருடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சுருக்கமாகக் கூறியுள்ளார்.        பிறப்பும் படிப்பும், ஆசிரிய வாழ்க்கை, லண்டன் வாசம் உள்பட 10 தலைப்புகளில் மார்க்ஸ் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.       மார்ஸீயத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள மார்க்ஸின் இந்த வாழ்க்கைச் சரிதம் நம்மைத் தூண்டுகிறது.       புதிய தத்துவங்களைக் கண்டவன்.ஆராய்ச்சி விளக்கை ஏந்திக் கொண்டு அறிவுச் சுரங்கத்தின் ஆழத்திற்குச் சென்ற அறிஞன். தொட்டுப் பார்த்தால் காகிதம்.. தொடர்ந்து படித்தால் ஆயுதம்..                   (விலை : ரூ 60)                   (மங்கை வெளியீடு)

Book வால்காவிலிருந்து கங்கை வரை

தினம் ஒரு புத்தகம் _____________________________ வால்காவிலிருந்து கங்கை வரை (ராகுல் சாங்கிருத்யாயன்)  தமிழில் ..கண.முத்தையா ______________________________         இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல்.மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை 20 கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.        இவைகள் வெறும் கதைகள் அல்ல.மனித இன வரலாறு. சரித்திரத்தைப் படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான, சுவையான நடையில் கூறப்பட்டுள்ள அறிவுப் பெட்டகம் இந்நூல்.        கதைமாந்தர் வழியாக தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ஆசிரியர்.கி.மு 6000 ல்  துவங்கும் முதல்கதை இருபதாவது கதையாக 1942 இல் முடிகிறது. அனைவரும் படித்ததோடு மட்டுமல்லாமல் பாதுகாத்து வைத்து, போற்ற வேண்டிய செல்வம் இந்நூல்.                   (விலை : ரூ 375)                   (தமிழ்ப் புத்தகாலயம்) 

Book அந்த வேப்ப மரங்கள்

தினம் ஒரு புத்தகம் ________________________________ அந்த வேப்பமரங்கள் (நா.காமராசன்) _________________________________        வேப்ப மரங்கள் முதிர்ந்து தம் நிலை சாய்ந்தாலும் பக்கத்தில் தோன்றும் கன்றுகள் செழித்து வளர்வதைக் காணலாம்.       வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளால் மக்கள் நிலைகுலைந்து போகாமல், உணர்ச்சி குன்றாமல் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியை "அந்த வேப்பமரங்கள் " என்ற புதுக்கவிதைத் தொகுப்பு நமக்கு உணர்த்தும். கவிஞரின் கவிதைகள் கற்போரைக் களிப்படையச் செய்பவை. காலத்திற்கும் அழியாதவை.         கம்ப்யூட்டர் ____________________ நான் கணக்கின் தலைநகரம்     விஞ்ஞானக்         கனவுகளின் சாம்ராஜ்ஜியம்.. எனது ஜனனம்    மனிதனுக்குப் போட்டியல்ல - - -        மனிதன் எந்திரமாவதை விட            எந்திரம் மனிதனாவது       மேலானதல்லவா?  தமிழர்களே!       உங்கள் மொழி பெயர்ப்பில்         ...

Book அகாலம்

தினம் ஒரு புத்தகம் ______________________________ அகாலம் (கே.என்.செந்தில்) ______________________________        சமூகத்தில் குடும்ப அமைப்பில் விதிகளை, ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வல்லுணர்வுகள் இவைகளின் ஆட்டத்தையே இவரின் கதைகளில் காணலாம்.          வாழ்க்கைச் சூழலின் நிர்பந்தங்கள் உருவாக்கும் நெருக்கடிகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள், வெட்டி எறியப்பட்டவர்கள் அகாலத்தில் சென்று மறைபவர்களின் காலடித் தடங்கள் பதிந்த இக்கதைகள், இழைவுகளும் சிடுக்குகளும் ஊடுருவ அகவுலகின் நுட்பமான புள்ளிகளைத் தொட்டுக் காட்டுகின்றனை.               (விலை : ரூ 175)               (காலச்சுவடு பதிப்பகம்)

Book லெனினின் வாழ்க்கை கதை

தினம் ஒரு புத்தகம் ______________________________ லெனினின் வாழ்க்கைக் கதை (மரீயா பிரிலெழாயெவா) ________________________________        விளாதீமிர் இல்யீச்சின் (லெனின்) வாழ்க்கையையும் செயல்களையும் பற்றிய உண்மையான விவரங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார்.        இந்நூலை வாசிப்பவர்களுக்கு, புரட்சிகரமான செயல்களும், எண்ணங்களும், உணர்ச்சிகளும் நிறைந்த உயர்ந்த உலகம் ஆட்கொள்ளும்.        "அமைதி எங்களுக்கு கனவில்தான் கிடைக்கிறது " என்பார்....உழைப்பு, கட்சிக்காக, மக்களுக்காக, புரட்சிக்காக உழைப்பு. எப்போதும் எங்கும், ஒரு நாள்கூடச் செயலின்றிக் செல்லவில்லை லெனினின் வாழ்வில்..       எல்லோருடைய நல்வளத்துக்காக எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்..புதுமையைத் தேடி மேன்மேலும் முன்னே செல்ல வேண்டும்..இது போன்ற கருத்துகள் நிறைந்த கருத்துப் பெட்டகம் இந்நூல்.. ஒரு புரட்சி வீரனின் வீரவரலாறு!!! புத்தகங்கள் என்பவை வெற்றுத்தாள்கள் அல்ல! எழுதப்பட்ட ஏவுகணைகள்!!             (முன்னேற...

Book அப்போதும் கடல் பார்த்து கொண்டு இருக்கிறது

தினம் ஒரு புத்தகம் ________________________________ அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருக்குகிறது.. (எஸ். இராமகிருஷ்ணன்) ________________________________          கடலோடிகளின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல் வரையிலான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை சொல்மொழியை உருவாக்குகின்றன.          கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளி வேசத்தையும், அர்த்தமற்ற தினசரி வாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கிறது.          அந்தக் கேலி நம்மைச் சிரிக்கச் செய்யும் அதே நேரத்தில் குற்றஉணர்வு கொள்ளவும்,  நிம்மதியற்றும் போகச் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு.                (விலை : ரூ 120)                (உயிர்மை பதிப்பகம்)

Book இந்த புத்தகத்தை வாங்காதீங்க

தினம் ஒரு புத்தகம் _____________________________ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! (கோபிநாத்) ______________________________         ஆசிரியர் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பயணங்கள் இவைகளின் தான் கற்றப் பாடத்தை நமக்குச் சொல்லியிருக்கிறார்.         இப்புத்தகம் வாசிப்பவர்களை,  அவர்கள் யார் என்று அடையாளம் காட்டும்.அவர்களின் சிறப்பியல்புகளையும், அவர்கள் திறனின் நீள, அகலங்களையும் சொல்லும்.          அவசர உலகில், வேகமாக ஓடிக் கொண்டிருப்பவர்களை சற்று இளைப்பாறச் செய்து, யோசிக்க வைக்கும்.         என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விக்கான பதிலைத் தேடும் ஒரு பார்வையாக இப்புத்தகம் இருக்கலாம்.               (விலை : ரூ 70) (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)

Book Bhavani

தினம் ஒரு புத்தகம் _____________________________ பவானி (லட்சுமி) ______________________________        லட்சுமி அவர்கள் முதன் முதலில் எழுதிய புதினம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தது.        இப்புதினத்தை வாசிக்கும் போது இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களை நாம் நாள்தோறும் எங்காவது சந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.         இப்புதினத்தில் இடம் பெற்றுள்ள கதையின் நாயகி பவானி, அவளுடைய அன்புக் கணவர் சுந்தரவதனம், மற்றும் ஷண்முகம், வனஜா ஆகியோர் இக்கதைக்கு உயிரையும் சுவையையும் ஒருங்கே ஊட்டுபவர்கள்.         அருமையான கதை .படிப்பவரை தன்வயப்படுத்தும் நூல்இது.                 (விலை : ரூ 95)                 (பூங்கொடி பதிப்பகம்)

GK

"The God of Small Things  (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்? அருந்ததி ராய்  விளக்கம்: "The God of Small Things  (தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்)" என்ற புதினத்தை எழுதியவர் "அருந்ததி ராய்" ஆவார். சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

GK

"Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் யார்? அன்னி பெசன்ட்  விளக்கம்: "Wake up india (வேக் அப் இந்தியா)" என்ற நூலை எழுதியவர் "அன்னி பெசன்ட்" ஆவார். அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.

GK

"A Passage to india (ய பாஸேஜ் டு இந்தியா)" என்ற ஆங்கிலப் புதினத்தை எழுதியவர் யார்? E.M. ஃ பாஸ்டர்  விளக்கம்: "A Passage to india (ய பாஸேஜ் டு இந்தியா)" என்ற ஆங்கிலப் புதினத்தை எழுதியவர் "E.M. ஃ பாஸ்டர்" என்பவர் ஆவார்.

GK

"Unto the last (அண்டு தி லாஸ்ட்)" என்ற ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியவர் யார்? ஜான் ரஸ்கின்  விளக்கம்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரஸ்கின் 1862 ஆம் பிரசுரித்த நான்கு கட்டுரைகளின் தொகுப்புகள் தான் ´அன் டு தி லாஸ்ட். ஜான் ரஸ்கின் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார்.