தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள். ---------------------------------------------------------------------------------- வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? ============================================ பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். •விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும். தேவையான ஆவணங்கள்: ------------------------------------------- பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சமீபத்தில்...