Posts

Showing posts from July, 2020

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை ?                தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! அவ்வப்போது அரவணைத்துச்செல்ல சில நண்பர்கள்  தேவை ! அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை ! துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை  ! ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை ! நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன்  அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை ! எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில  நண்பர்கள் தேவை !                  இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய்  உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக  இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை அந்த சிலரை  தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைக...

எப்படி இருந்த பழமொழிகள் இப்படி போச்சே...

எப்படி இருந்த பழமொழிகள் இப்படி போச்சே... 1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" சரியான பழமொழி : "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்". விளக்கம் : இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது. 2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு. சரியான பழமொழி : ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - . 3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு. சரியான பழமொழி : படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் 4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு. சரியான பழமொழி : ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - 5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு. சரியான பழமொழி : நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - ( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது ப...

நகைச்சுவை

வாழ்க வளமுடன்! இனிப்பு,கசப்பு,புளிப்பு,கார்ப்பு,உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகள் உடலுக்கு இனிமை தரும். ஏழாவதான *நகைச்சுவை* மனதுக்கு இனிமை தரும். புன்னகை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம். புன்னகையில் இருவகை  1.விருப்பப்புன்னகை 2.அனிச்சைப் புன்னகை  *விருப்பப் புன்னகை* நாம்  விரும்பும் போது வலிந்து புன்னகை செய்வது இது. இவ்வாறு செய்யும் போது கன்னத்தில் வாய்க்கு அருகில் உள்ள தசை (சைக்கோமேட்டிகஸ்)மட்டுமே இயங்கும்.  *அனிச்சைப் புன்னகை* இயல்பாக சிரிப்பது. வாய்க்கு மேல் உள்ள தசை இயங்குவது மட்டுமல்லாமல் கண்களுக்கு கீழே உள்ள தசையும்(ஆர்பிகுலேரிஸ் ஆக்குலி) இயங்கும்.இது மூளையுடன் நேரடி தொடர்புடைய பகுதியாகும். அனிச்சைப் புன்னகை விருப்பப்புன்னகையை விடச் சிறந்தது. சிரிப்பு நிறைய பிரச்சனைகளைத் தீர்த்துவிடும்.பறவைக்கு சிறகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனிதர்க்கு சிரிப்பு. சிரிப்பு மிகச் சிறந்த மருத்துவர் என்றே கூறலாம். 15 நிமிடம் சிரித்தால் ஒருவனுடைய ஆயுளில் 2 நாட்கள் கூடுகிறதாம். சிரிப்பை ஒரு உடற்பயிற்சி என்றே கூறலாம்.நாம் செய்யும் உடற்பயிற்சியிலும் சிரிப்பத...