Posts

Cancer Treatment

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம்.  கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்..  முக்காலியில் இருந்து நம் சிறியரக  கார்களில் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே சரியாக இருக்கும்.. மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம். பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் விசாரித்தால் பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் இந்த காட்டை அழிக்க கூடாது என்று அவருக்கு பட்டயம் போட்டு கொடுத்துள்ளார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்...

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள். ---------------------------------------------------------------------------------- வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன்  பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப்  பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? ============================================ பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். •விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life  Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும். தேவையான ஆவணங்கள்: ------------------------------------------- பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ்  இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சமீபத்தில்...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?  தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் எப்படி இருக்கும் ? ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வருமா ?  படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !! கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?  ஒரு அறிவியல் பூர்வமான அலசல். படித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன் ! கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது..  (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.  எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி என்று கேட்ப...

பழமொழி

🌝 தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால்  அடை மழைக்கு அச்சாராம்.  🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.  🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.  🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு. 🌝 வெள்ளமே ஆனாலும்  பள்ளத்தே பயிர் செய்.  🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு. 🌝 களர் கெட பிரண்டையைப் புதை. 🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி  கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. 🌝 நன்னிலம் கொழுஞ்சி  நடுநிலம் கரந்தை  கடை நிலம் எருக்கு. 🌝 நீரும் நிலமும் இருந்தாலும்  பருவம் பார்த்து பயிர் செய். 🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.  🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும். 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை. 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 🌝 உழவில்லாத நிலமும்  மிளகில்லாத கறியும் வழ வழ.  🌝 அகல உழவதை விட  ஆழ உழுவது மேல் . 🌝 புஞ்சைக்கு நாலு உழவு  நஞ்சைக்கு ஏழு உழவு. 🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. 🌝 ஆடு பயிர் காட...

ஓம்

*_ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது_* *1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது.* *நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும்.* *2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.* *3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை*  *ஒருமுகபடுத்துகிறது.* *4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும்.*  *ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.* *5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.* *6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டம...

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்

#கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள் (இப்பதிவேடுகளை கிராம சபை கூட்டத்தில் மக்கள் பார்வையிட சமர்பிக்க வேண்டும்) #பதிவேடுகள்_பராமரித்தல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மூலதனம்/பராமரிப்பு தொடர்பான பட்டியங்கள்/வங்கி கைச்சாத்துக்கள் ரொக்க பதிவேடுகள். ஏனைய பதிவேடுகள், பதிவுருக்கள் அனைத்தும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 1.வீட்டு வரி கேட்பு தொகை அறிவிப்பு: வீடு உரிமையாளரின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பாகும். 2. வீட்டு வரி ரசீதுக்கள்: வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும். 3. வீட்டு வரி, நிலுவைத்தொகை, நடப்பு வரி தொகை, கேட்பு தொகை பதிவேடு: இப்பதிவேடு ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். புதிதாக வீட்டு வரி செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம்/நீக்கம் செய்யலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்ட தீர்மானத்தை இனைக்க வேண்டும். 4. தொழில் வரி ரசீது: தொழில் வரி செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட...

FMB

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை  குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது  எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..  சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G...