Posts

Showing posts from May, 2020

English

"Sita cooks very well" identify the sentence pattern.   SVA விளக்கம்: "Sita/ cooks/ very well" is a SVA sentence pattern.

English

What is the prefix for "Editor"? sub விளக்கம்: The prefix for "Editor" is "sub Editor". A prefix is an affix which is placed before the stem of a word. Adding it to the beginning of one word changes it into another word. For example, when the prefix un- is added to the word happy, it creates the word unhappy. Particularly in the study of languages, a prefix is also called a preformative, because it alters the form of the words to which it is affixed. Prefixes, like other affixes, can be either inflectional, creating a new form of the word with the same basic meaning and same lexical category (but playing a different role in the sentence), or derivational, creating a new word with a new semantic meaning and sometimes also a different lexical category. Prefixes, like all other affixes, are usually bound morphemes.

English

"Ram laughed" Identify the sentence pattern. SV விளக்கம்: "Ram / laughed" is a SV sentence pattern.

English

What is the question tag for "Let us attend the party"  shall we? விளக்கம்: The question tag for "Let us attend the party" is "shall we?" A question tag or tag question (also known as tail question) is a grammatical structure in which a declarative statement or an imperative is turned into a question by adding an interrogative fragment (the "tag").For example, in the sentence "You're John, aren't you?", the statement "You're John" is turned into a question by the tag "aren't you". The term "question tag" is generally preferred by British grammarians, while their American counterparts prefer "tag question".

English

"john is tall" Identify the sentence pattern. SVC விளக்கம்: "John / is / tall" is a SVC sentence pattern.

Motivation

Image

English

What is the suffix for "scholar"? ship விளக்கம்: The suffix for "Scholar" is "Scholarship". Generally in linguistics, a suffix (also sometimes termed postfix or ending) is an affix which is placed after the stem of a word. Common examples are case endings, which indicate the grammatical case of nouns or adjectives, and verb endings, which form the conjugation of verbs.

Punctual

Image

Book - உச்சியிலிருந்து தொடங்கு

தினம் ஒரு புத்தகம் ___________________________ உச்சியிலிருந்து தொடங்கு (வெ.இறையன்பு) ____________________________        வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு.        அடுத்த நொடி இப்படி இருக்கும் எனச் சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பாய் மாற்றுகிறது.      உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்தித்தாலும், சருகுகளை மிதிப்பதைப் போல கருதிக் கொண்டு துவளாமல் முன்னேறுபவர்கள் தோல்விகளை, வெற்றிக்கு உரமாக்கிக் கொண்டு உயர்கிறார்கள்.        புயல் வீசினாலும் புறமுதுகுக் காட்டாத பாக்கியசாலிகள் அவர்கள்.               (விலை : ரூ 175)               (விஜயா பதிப்பகம்)

GK

What is the question tag for "You're Rajesh"? aren't you? விளக்கம்: The question tag for "You're Rajesh" is "aren't you?" A question tag or tag question (also known as tail question) is a grammatical structure in which a declarative statement or an imperative is turned into a question by adding an interrogative fragment (the "tag").For example, in the sentence "You're John, aren't you?", the statement "You're John" is turned into a question by the tag "aren't you". The term "question tag" is generally preferred by British grammarians, while their American counterparts prefer "tag question".

GK

உலகின் மிகப் பழமையான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எங்கே இருக்கிறது? ஆம்ஸ்டர்டாம் விளக்கம்: உலகின் மிகப் பழமையான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் உள்ளது. 1602 இல் டச்சு ஈஸ்ட் இந்திய கம்பெனி இதனை உருவாக்கியது.

GK

தென் இந்தியாவின் மான்செஸ்டர் எது? கோவை  விளக்கம்: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது கோவையே.

Book - பணம் - பெண் - பாசம்

தினம் ஒரு புத்தகம்  ______________________________ பணம் - பெண் - பாசம் (ஜாவர் சீதாராமன்) _______________________________        வாழ்வில் தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லை என்ற எண்ணத்துடன், செல்வம் மேல் செல்வம் குவிக்கும், தன் மகள் மேல் உயிரையே வைத்திருக்கும் தொழிலதிபர் "சக்ரபாணி ".         இளமையில், போலீசுக்கு பயந்து ரயிலில் விழவிருந்த சக்ரபாணிக்கு தன் நிலத்தை விற்று தொழில் தொடங்க பணம் கொடுத்து உதவினார் "லால்குடி சீனிவாசன் ". அவருக்குத் துன்பம் வரும்போது காப்பாற்ற மறுத்துவிட்டான் சக்ரபாணி. அவன் மகனுக்கும் உதவவில்லை.        இதையெல்லாம் தன் தாய்வழி தாத்தா மூலம் அறிந்த "பாலா " (சக்ரபாணியின் மகள்)  குருமூர்த்தியின் குடும்பத்திற்கு, தான் யார் என்று சொல்லாமலே, அவர்கள் வீட்டிற்குச் சென்று சேவகம் செய்கிறாள்.சீனிவாசன் மகள் திருமணத்திற்கு தன் தந்தைமூலம் பண உதவி செய்கிறாள்.அக்குடும்பமே வாழ்த்துகிறது. பாலா அத்தை மகன் மோகனை மணக்கிறாள்.சக்ரபாணி உலகில் பணத்தைவிட சிறப்பானது "அன்பு " தான் என்பதை உணர்கிறான்.       488 பக்கங...

GK

நீலப் புரட்சி என்பது கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்பு உடையது? மீன் உற்பத்தி  விளக்கம்: நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை குறிக்கும்.

Book - பந்தம் பவித்ரம்

தினம் ஒரு புத்தகம் ____________________________ பந்தம் பவித்ரம் (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்..கௌரி கிருபாநந்தன் _____________________________       மனதில் ஏற்பட்ட அதிருப்தியானது ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தடம் புரளச் செய்துவிட்டது.       சமுதாயக் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்குப் பலியான ராக்காயி, சுயநம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்கிறாள்.        கற்பனை செய்து தான் படைத்த ஒரு நிகழ்ச்சி, நிஜமாகவே நடந்தால் எந்த எழுத்தாளனுக்கும் த்ரில்லாகத் தானே இருக்கும்..       வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட புதினம் இது.வாசிப்பவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நூல் ..            (விலை : ரூ 240)            (அல்லயன்ஸ் கம்பெனி)

GK

மஞ்சள் புரட்சி என்பது கீழ்கண்டவைகளில் எதனுடன் தொடர்பு உடையது? எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி  விளக்கம்: மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்கள் சம்மந்தமான உற்பத்தியை குறிக்கும்.

Book - துறைமுகம்

தினம் ஒரு புத்தகம் ______________________________ துறைமுகம் (தோப்பில் முஹம்மது மீரான்) _______________________________         குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை.        ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருத்திப் போவது இப்புதினத்தின் வெற்றி.       குறிப்பாக காசிம் சுவரில் விழும் போது, அந்தச் சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர முற்படும் இடம் மனதை வலிக்கச் செய்கிறது.கதை முழுவதும் வலி சுமக்கும் பிம்பங்களை முன்னிறுத்தி நகர்த்துகிறார்.         இந்நூலை வாசிக்கும் போது,  அம்மக்களின் வாழ்நிலை குறித்த பல விசயங்களை அறிந்து கொள்ள முடியும்.          இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல் இது.               (விலை : ரூ 190)               ( அடையாளம் பதிப்பகம்)   

GK

வெள்ளைப் புரட்சி கீழ்கண்டவைகளில் எதனுடன் சம்மந்தப் பட்டது? பால் உற்பத்தி விளக்கம்: வெள்ளைப் புரட்சி என்பது பால் உற்பத்தியுடன் தொடர்பு உடையது.

Book - பிரபஞ்சன் கதைகள்

தினம் ஒரு புத்தகம் _____________________________ பிரபஞ்சன் கதைகள் _____________________________       பிரபஞ்சன் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானவை.சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள், அன்பினால் மட்டுமே, மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன.       பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள்அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள்.அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள்.       மொழி நுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல் கலை நேர்த்தி பெற்றுள்ளன இச்சிறுகதைகள்.           (விலை : 1500)           (டிஸ்கவரி புக் பேலஸ்)

Book - பட்டாம்பூச்சி

தினம் ஒரு புத்தகம் _______________________________ பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) ________________________________        ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறைக்கைதியால் பாப்பிலான் (பட்டாம்பூச்சி) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த சுயசரிதை புத்தகம்.ரா.கி.ரங்கராஜன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.       சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு.சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை எதிர்கொண்டு அதை வெற்றி கொள்ளும் அவன் மனத்துணிவும், யாருக்கும் பணியாத.. அதே சமயம் யாரையும் பகைத்துக் கொள்ளாத சாமர்த்தியமும் படிப்பவரை வியக்க வைக்கும்.         காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த காவியம். எத்தனை முறை படித்தாலும் சலிக்காது..      தமிழிலும், மலையாளத்திலும் வெளிவந்த "சிறைச்சாலை " திரைப்படம் இப்புதினத்தின் தாக்கத்தைக் கொண்டதாகும்.              (விலை : ரூ 400)           ...

GK

வீர சாகசம் புரியும் சிறுமிக்கு மத்திய அரசு சார்பாக என்ன விருது வழங்கப்படும்? கீதாசோப்ரா  விளக்கம்: வீர சாகசம் புரியும் சிறுமிக்கு மத்திய அரசு சார்பாக "கீதாசோப்ரா" என்ற விருது வழங்கப்படும்.

Book - பதின்

தினம் ஒரு புத்தகம் ___________________________ பதின் (எஸ்.ராமகிருஷ்ணன்)  ___________________________        பால்யத்தின் குழப்பங்களை, மகிழ்ச்சியை, துயரத்தை, பயத்தை, அவமானத்தை, ஏமாற்றத்தை, திருட்டுத்தனத்தை, கற்பனையை, தோழமையை, கனவுகளை பதிவு செய்யவே இந்நூல் முயற்சி செய்கிறது.         மற்ற புதினங்களைப் போல கதாப்பாத்திரங்களைப் பயன்படுத்தி சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நூல் எழுதப்படவில்லை.ஒரே ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப் போல சின்னஞ்சிறு நிகழ்வுகள் இதில் மின்னுகின்றன.        நம் பாலிய கால நிகழ்வுகளை அசைபோட வைக்கும் நூல்..                 (விலை : ரூ 275)                 (நற்றிணை பதிப்பகம்)

GK

ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார்? அகிலன்  விளக்கம்: ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் "அகிலன்" ஆவார். அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975 ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

GK

இந்திய ராணுவ விருதுகளில் மிக உயர்ந்த விருது எது? பரம்வீர் சக்ரா  விளக்கம்: இந்திய ராணுவ விருதுகளில் மிக உயர்ந்த விருது "பரம்வீர் சக்ரா" விருது ஆகும். 

Book - அந்தமான்

தினம் ஒரு புத்தகம் ___________________________ அந்தமான் (கோபி.சரபோஜி) ____________________________       "அந்தமான் " ஓர் இடத்தின் பெயர் மட்டுமல்ல.அது மானிடகுல வரலாறு.தியாகம், துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்குக் கொண்டு வரும் பதம்.        அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய்த் தள்ளி முன்னே வரும், அந்தமான் செல்லுலார் சிறையைக் குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.                 (விலை : ரூ 50)                 ( பாரதி புத்தகாலயம்)

GK

வீர சாகசம் புரியும் சிறுவனுக்கு மத்திய அரசு சார்பாக என்ன விருது வழங்கப்படும்? சஞ்சய் சோப்ரா  விளக்கம்: வீர சாகசம் புரியும் சிறுவனுக்கு மத்திய அரசு சார்பாக "சஞ்சய் சோப்ரா" என்ற விருது வழங்கப்படுகிறது.

Book - நிலமெனும் நல்லாள்

தினம் ஒரு புத்தகம் ____________________________ நிலமெனும் நல்லாள் (இந்திரா பார்த்தசாரதி) ____________________________      சமூக சேவை சாமுவேல் ..பட்ட கடனுக்கு தன் மகளை ரவுடி நாணுவுக்கு மணமுடிக்க விரும்பும் சாமண்ணா ..சமூக அமைப்பை மாற்ற புரட்சியை பரிகாரமாகக் காணும் இளைஞன் ராஜீ.. வெத்துப் பேச்சும் வெற்றிலையுமாகக் காலம் தள்ளும் சிவகுரு.. புற்று நோய் தஞ்சம்மா.. நிர்மலா, தர்மு, சொர்ணம், பண்ணையார் .. இப்படி பாத்திர அமைப்பு மூலமாகவே சுற்றுப்புற சூழ்நிலைகளை வர்ணனைகள் இல்லாமல் தஞ்சாவூர் கிராமத்தை நம் மனதில் ஆசிரியர் பதிய வைக்கிறார்.அதுதான் நூலின் வெற்றி..        பொருளாதார ஏற்றத்தாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் என்ற புற அமைப்புகளில் எதிர் நீச்சலடிக்கும் சில மனிதர்கள், சில மனங்கள், சில பொழுதுகள் இவற்றைத் தத்துவரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இப்புதினம்.            (விலை : ரூ 10, (1980ல்)            (தமிழ் புத்தகாலயம்)

GK

அதிக வெப்பத்தை தாங்கும் கண்ணாடி எது? பைரக்ஸ் கண்ணாடி  விளக்கம்: பைரக்ஸ் கண்ணாடி தான் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியதாகும். அதனால் தான் இதனை ஆய்வுக் கூட கருவிகள் செய்யப் பயன்படுத்துகிறோம். பைரக்ஸ் கண்ணாடி என்பது போரோ சிலிக்கேட் கண்ணாடி ஆகும்.

Book - பசித்த மானுடம்

தினம் ஒரு புத்தகம் ______________________________ பசித்த மானுடம் (கரிச்சான் குஞ்சு ) ______________________________       தமிழில் அதிகம் பேசப்பட்ட புதினம்.பணம், அதிகாரம், என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றி பேசுகிறது.      எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள், ஒரு கட்டத்திற்குபின் வேகமாகி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தைக் கூறுகிறது இந்நூல்.       முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள் பல்வேறு இன்பங்களைத் துய்த்தபின்,  கடைசியாய் அடைவது என்ன என்னும் கேள்வியை எழுப்புகிறது.         வாழ்க்கை இழுத்த இழுப்புக்குச் செல்லும் கணேசன், வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வளைக்கும் கிட்டா இருவரும் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள் அவர்களை எங்கு இட்டுச் செல்கிறது என்பதே கதைக்களம்...                 (விலை : ரூ 290)                 (காலச்சுவடு பதிப்பகம்)

Book - தொல்காப்பிய பூங்கா

தினம் ஒரு புத்தகம் _______________________________ தொல்காப்பியப் பூங்கா (கலைஞர் கருணாநிதி) _______________________________       தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் பலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் பலரும் புரிந்து கொள்ளும்படி மிகவும் எளிய வகையில், பலாச்சுளை போன்ற கருத்துகளை அள்ளித் தந்தவர் கலைஞர் மட்டுமே.       இலக்கண வகையில், மரபு வழியில் மலைக்குன்று போல் இருந்த தொல்காப்பியத்தை, தன் எழுத்து உளியால் உடைத்து, அதில் கருத்தாழமிக்க குறிப்புகளைப் பயிரிட்டு பூங்காவாக மாற்றியவர் முத்தமிழ்அறிஞர் அவர்கள்.        இந்நூலின் நோக்கம் பற்றி அவர் கூறும்போது, "இலக்கணம் மட்டுமே கூறுவது என் நோக்கமில்லை என்றாலும், இலக்கணத்தில் முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான முயற்சி " என்றார்.       மெய்யெழுத்துகள் எத்தனை என்று எவ்வாறு நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞர் அவர்கள் சொல்லும் வரலாற்றுக் குறிப்பு மிகவும் வித்தியாசமானது. பூங்காவினுள் வலம் வாருங்கள்... இலக்கண மணம் நுகருங்கள்..             ...

Book- அரசூர் வம்சம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ அரசூர் வம்சம் (இரா.முருகன்) ______________________________        காலம் ஓயாதுமுன்னே சென்று கொண்டிருக்கும் அம்பைப் போன்றது.அதை தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.       இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி ஒடுக்கி முன்னும் பின்னும் ஓடச் செய்ய காலம் காலமாய் படைப்பாளிகள் முயன்று வருகிறார்கள்.."அரசூர் வம்சம் " அப்படி ஒரு முயற்சி.       கதையில் சூத்திரதாரியாக வரும் பனியன் சகோதரர்கள் காலத்தின் குறியீடுகள்.அவர்கள் முன்னும் பின்னும் ஓடி எதிர்காலத்தின் சின்னங்களை இறந்த காலத்தில் பதிக்கிறார்கள்.இறந்த கால நினைவுகளை நிகழ் காலத்திற்கு  இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.        வாழ்க்கையின் உயிர்தலுக்குக் காரணம் நினைவுகள் போடும் உணவே..இதை இந்தப்புதினத்தின் பக்கங்கள் வலியுறுத்துகின்றன.                 (விலை : ரூ 500)                 (கிழக்கு பதிப்பகம்)

GK

இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்? விஸ்வநாதன் ஆனந்த்  விளக்கம்: இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் "விஸ்வநாதன் ஆனந்த்" ஆவார். விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் ஆவார்.  இவருக்கு 1987 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Book - நைலான் கயிறு

தினம் ஒரு புத்தகம் _______________________________ நைலான் கயிறு (சுஜாதா) _______________________________        சுஜாதாவின் முதல் புதினம்.1960 களில் குமுதம் இதழில் வெளிவந்தது.         அதிரடியான எழுத்துநடை, அக்காலத்து பாணியிலிருந்து முற்றிலுமாக விலகி வித்தியாசமாகக் கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதன்முதல் அறிமுகமானது என்று இந்த "நைலான் கயிறு "க்கு பல சிறப்புகள் உண்டு.         இப்போதும், இந்நூலை வாசிக்கும்போது அதே உற்சாகம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.                 (விலை : ரூ 160)                 (கிழக்கு பதிப்பகம்)

GK

நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் யார்? ரவீந்திரநாத் தாகூர்  விளக்கம்: நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை "ரவீந்திரநாத் தாகூர்" அவர்களைத் தான் சேரும்.  இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Book - வாழ்க்கை நலம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ வாழ்க்கை நலம் (குன்றக்குடி அடிகளார்) ______________________________        சிந்தனை என்பது ஒரு வானம் விரிந்து கொண்டே செல்லும். அதற்கு எல்லைகிடையாது.       சிந்தனை விரிய விரிய அறிவு ஆழப்படும்.வாழ்வின் புதிர்கள் புலப்படத் தொடங்கும்.வாழ்க்கை வசப்படத் துவங்கும்.       இந்நூலில் அடிகளாரின் சிந்தனை வானம்போல் விரிவடைகிறது.வள்ளுவம் என்னும் மையப்புள்ளியிலிருந்து இந்தச் சிந்தனைகள் புறப்பட்டிருக்கின்றன.        வாசித்து முடித்தவுடன் வாழ்வின் புரியாத பல பக்கங்களைப் புரிந்து கொண்டது போல் ஓர் உணர்வு ஏற்படும்.         வாசிப்பவர்கள் சிந்தனைச் சிறகுகளை விரிப்பதற்குப் புதிய ஆகாயம் ஒன்றை இந்நூல் வழங்கும் என்பதில் ஐயமில்லை..              (விலை : ரூ 50)              (கற்பகம் புத்தகாலயம்)

GK

நோபல் பரிசு எப்போதும் எந்த தினத்தில் வழங்கப்படும்? டிசம்பர் 10 விளக்கம்: நோபல் பரிசு எப்போதும் "டிசம்பர் 10" ஆம் தேதி தான் வழங்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தான் ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினம் ஆகும். ஆல்பிரட் நோபல் தான் நோபல் பரிசை உருவாக்கியவர் ஆவார்.

மூதுரை

மூதுரை _________________ நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யு மழை. பொருள் __________________     நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழியாகச் சென்று அங்கிருக்கும் புற்களுக்கும்  பயனைத் தரும். பழமையான இவ்வுலகில், நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவருக்காக பெய்யும் மழையானது அனைவருக்கும் பயனைக் கொடுக்கும்.

மூதுரை

மூதுரை _______________ தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்கள் உறைப்பதுவுந் தீதே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் தீது. பொருள் _________________     தீக்குணம் உடையவரைப் பார்ப்பதும் தீயதே.தீயவருடைய பயனில்லாதச் சொல்லைக் கேட்பதும் தீயதே.தீயவருடைய தீய குணங்களைப் பேசுவதும் தீயதே. அத்தீயவருடன் நட்பு பாராட்டுதலும் தீயதே.

Book - வில்லோடு வா நிலவே

தினம் ஒரு புத்தகம் ___________________________ வில்லோடு வா நிலவே (கவிப்பேரரசு வைரமுத்து) ____________________________        வரலாற்றுப் புதினம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அரசாட்சி, போர் முதலியவை தான்.       ஆனால் அவற்றைச் சுருக்கி, இளவரசன் ஒருவனின் காதல் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி, அதனூடே சேரஅரசின் தடங்களைச் தொட்டுச் செல்கின்ற ஓடையாக உள்ளது கவிஞரின் இந்நூல்.       நூலின் தலைப்பே இதைச் சொல்லாமல் சொல்லும்.        சேரப்பேரரசு பரந்து விரிந்த காலக் கட்டத்தில் பயணமாகிறது கதைக்களம்.        சேரர்களுக்கும் கடம்பர்களுக்கும் இருந்த பகை, யவன அரேபிய நாடுகளுடன் இருந்த வணிகம், சேரநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பு ஆகியவற்றை அழகுடன் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார் கவிஞர்.        தமிழ் ஆளுமையும், கதையோட்டமும், வரலாற்றுக் குறிப்புகளும் பல கேள்விகளையும் தேடல்களையும் நமக்குக் கொடுக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.                   (...

TET and TRB Preparatory

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdgK75_NvelSfaUiWqsvMcZZFKdgZ8bCsepe5bHpL951cjooA/viewform?usp=sf_link

GK

கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம் எது? சாரநாத் விளக்கம்: சாரநாத் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 13 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.

Book - ஈரம் கசிந்த நிலம்

தினம் ஒரு புத்தகம் ____________________________ ஈரம் கசிந்த நிலம் (சி.ஆர்.ரவீந்திரன்) _____________________________        கதையில் நிழலாய் இருக்கும் கதாப்பாத்திரம் நிலம் தான். நிலத்தின்மீது பற்று கொண்ட வேளாண்மையை மட்டும் முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த மக்களைக் கதைமாந்தர்களாகக் கொண்ட புதினம்.       அம்மணி தன் கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறாள். காரணம் நிலத்தின்மீது வைத்த ஆசை.      வெடிக்காரர் அளவுக்கதிகமாக உள்ள நிலம் சும்மா பாழாகிறதே என்று, காளியப்பனுக்கு குத்தகைக்கு விடுகிறார்.பிரச்சனை வருகிறது.காளியப்பன், மாணிக்கத்தால் கொல்லப்படுகிறான்.       மணமணக்க கொங்கு வட்டார மக்களின் வாழ்வை அப்படியே அவர்கள் வட்டார மொழியில் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர்.       பல விருதுகள் பெற்ற ஒரு "பண்பாட்டு ஆவணம் " இந்நூல்.                  (விலை : ரூ 200)                  (காலச்சுவடு பதிப்...

Book - சூடிய பூ சூடற்க

தினம் ஒரு புத்தகம் ___________________________ சூடிய பூ சூடற்க (நாஞ்சில் நாடன்) ___________________________       இந்நூலில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.       இதில் உள்ள சிறுகதைகள் உயிர்மை, ஆனந்த விகடன், தினமணி, உயிரெழுத்து, ரசனை இதழ்களில் வெளியானவை.      ஒரு படைப்பின் பிரத்யேக அழகே படைப்புகளை மீறி, படைப்பாளியின் குரல் உரக்க ஒலிக்கும் தன்மைதான்.       இயல்பான நகைச்சுவையுடன் கூடிய நல்ல வாசிப்பனுபவத்தை இந்த பதினைந்து கதைகளில் தருகிறார் ஆசிரியர்.       பத்தகத்தின் பல பகுதிகளில் அவரின் தமிழ் இலக்கிய ஆளுமை கதையோட்டத்தினூடே இயல்பாய் வெளிப்படுகிறது. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.                  (விலை : ரூ 100)                  (தமிழினி பதிப்பகம்)

GK

கஞ்சன் ஜங்கா உயரம்? 8598 மீ

Book - காசி ஆனந்தன் கவிதைகள்

தினம் ஒரு புத்தகம் ____________________________ காசி ஆனந்தன் கவிதைகள் _____________________________        ஈழம் தந்த வேழம் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.அவரின் தமிழ், தமிழ் உணர்வு பற்றிய பாடல்கள் கொண்ட தொகுப்பு இந்நூல்.       இவருடைய பாடல் வரிகளில் புயலின் வேகத்தை, பூகம்பக் குலுக்கலை, எரிமலையின் சீற்றத்தை உணரமுடியும்.      "கள மெனில் முழங்கி வரும் ஏறு!  -  தமிழன்        கங்கு கரை பொங்கிவரும் ஆறு! "       தமிழனின் ஆற்றலை இந்த இரு வரிகள் நன்குப் புலப்படுத்தும்.      நூல் முழுவதுமே கவிதை வரிகள் போர்க்கோலம் பூண்டு வீரநடை போடுகின்றன. எழுத்துகள் அல்ல ; ஈட்டிகள்! வேல்கள்! போர் வாட்கள்!       அவருடைய கவிதைகள் தமிழரைப் புத்துணர்ச்சி கொண்டு எழச் செய்யும் மாமருந்து.  சிந்தனை விருந்து ... தெவிட்டா தெள்ளமுது... "மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல மானம் ஒன்றுதான் அடிப்படை! வெறிகொள் தமிழர் புலிப்படை!  - அவர் வெல்வார் என்பது வெளிப்படை!          ...

GK

குடும்ப விளக்கு நூல் ஆசிரியர் யார்?  பாரதிதாசன்

GK

இந்தியா - ரஷ்யா" ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர் என்ன? INDRA விளக்கம்: "இந்தியா - ரஷ்யா" ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர் "INDRA" எனப்படும்.

Book - காகித மலர்கள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ காகித மலர்கள் (ஆதவன்) _______________________________         மனிதர்களின் மனப்போக்குகளை, வேசங்களை அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் பதிவு செய்துள்ளார்.        70 களில் டெல்லியில் வாழ்ந்த சில தமிழ்க் குடும்பங்கள் எப்படி இருந்தன என்ற பிம்பத்தை இப்புதினம் வெளிப்படுத்துகிறது.        நாகரிக வாழ்வு என்ற பெயரில் தனது சுயத்தை இழந்து விதவிதமான வேசங்கள் அணிவதன் மூலம், தன்னை திருப்திப்படுத்த முயலும் கதாப்பாத்திரங்களை "காகித மலர்கள் " முன் வைக்கிறது.       கதாப்பாத்திரங்கள் போலியான வேசங்களை அணிவதால் அவர்கள் வாசமில்லா காகித மலர்கள் ஆகிறார்கள். வாசியுங்கள்.. வாசிப்பவரை யோசிக்க வைக்கும் புதினம் இது..                (விலை : ரூ 310)                ( உயிர்மை பதிப்பகம்)

GK

"டயட்" என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஆகும்? ஜப்பான்  விளக்கம்: "டயட்" என்பது "ஜப்பான்" நாட்டின் நாடாளுமன்றம் ஆகும்.

Book - நேற்றைய காற்று

தினம் ஒரு புத்தகம் ______________________________ நேற்றைய காற்று (யுகபாரதி) ______________________________        திரையுலகக் கவிஞர்களின் சொந்த வாழ்க்கைச் சூழல் பற்றியும், திரையுலகுக்கு அவர்கள் அறிமுகம் ஆன விதம் மற்றும் அவர்களின் கவித்திறன் பற்றியும் ஆசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார்.        தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு இன்று வரையுள்ள பாடலாசிரியர்கள் பற்றியும், அவர்களின் எழுத்துநடை எப்படி எல்லாம் நெஞ்சை நெகிழ வைக்கும் தன்மையோடு அமைந்திருந்தது என்றும் உதாரணங்களோடு அழகாகத் தொகுத்துக் கூறியுள்ளார்.          திரைப்பட பாடலாசிரியர்களின் கவித்துவம் பற்றி சிலாகித்துள்ளார் ஆசிரியர்.வாசிப்பு அனுபவத்திற்கு சுவையூட்டும் நூல் இது.               (விலை : ரூ 500)               (நேர்நிரை பதிப்பகம்)

GK

உருளைக் கிழங்கைத் தாக்கும் பூஞ்சையின் பெயர் என்ன? ஸ்மட் விளக்கம்: உருளைக் கிழங்கைத் தாக்கும் பூஞ்சையின் பெயர் "ஸ்மட்" என்று அழைக்கப்படும். மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக...

Book- சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

தினம் ஒரு புத்தகம் _______________________________ சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை.. (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்..கௌரி கிருபாகரன் _________________________________        ஆசிரியரின் அற்புதப் படைப்பான இந்நூல் பேசாத பேச்சிற்கு எவ்வளவு சிறப்பு என்பதை விளக்குகிறது அழகான கதைமூலம்.        கதை நாயகன் "சம்புமித்ரன் " தாயை இழந்தவன்.அக்காள் தங்கை இல்லாதவன்.தந்தையிடம் அதிகம் பேச தயங்குபவன்.அவன் நண்பர்கள் சந்திரன், அரெஸ்பா போன்று பெண்களிடம் சரளமாக பேசமாட்டான்.       திருமணத்தில் ஆர்வம் இல்லாமல், இறுதியில் ஒத்துக் கொள்கிறான். நண்பர்கள் கேலி செய்கின்றனர்.மனைவியிடம் பேசித்தானே ஆகவேண்டும் என்கின்றனர்.நாயகன் பதில் சொல்கிறான்...பிரச்னைக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் எதிர்பாராத விதமாக, நான் மனைவியாக தேர்ந்தெடுத்திருக்கும் பெண் ஊமை என்கிறான்.கீரவாணி, கல்யாணி, வராளி.. ராகம் எதுவானால் என்ன? கம்பி ஒன்றுதானே? அத்துடன் கதை முடிகிறது.         "பேசிய சொற்கள் உன்னை ஆட்சி செய்கின்றன.பேசாத சொற்களை நீ ஆட்சி செய்கிறாய் " என்ற அறிஞனின...

GK

 ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் என்ன? அருள் மொழி வர்மன்  விளக்கம்: முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

Book- ஸ்ரீமதி மைதிலி

தினம் ஒரு புத்தகம் _____________________________ ஸ்ரீமதி மைதிலி (லட்சுமி) _____________________________        புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை என்ற வள்ளுவனின் கூற்றை, "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்  ஏறுபோல் பீடு நடை " என்ற குறள் நமக்கு உணர்த்தும்.        இக்கதையின் நாயகி மைதிலி வீணர்களின் வம்பால் வளமான வாழ்விலிருந்து வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டு, அதிலிருந்து தத்தளித்துத் தடுமாறி தன் கணவன் நீலகண்டனுடன் நீந்திக் கரையேறி, தன்னை துச்சமாக எண்ணியவர்களே துதிபாடும் அளவிற்கு தன் கணவனுடன் புகழ் ஏணியில் ஏறி தலைநிமிர்ந்து நிற்கிறாள் - மேற்கண்ட வள்ளுவனின் வாக்கிற்கு விளக்கமாக.         பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆனந்தவிகடனில் வெளிவந்த ஆயிரமாயிரம் அன்பு உள்ளங்களைக் கட்டிப் போட்ட கதை.                 (விலை : ரூ190)                 (பூங்கொடி பதிப்பகம்)