Book- ஸ்ரீமதி மைதிலி

தினம் ஒரு புத்தகம்
_____________________________
ஸ்ரீமதி மைதிலி
(லட்சுமி)
_____________________________
       புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை என்ற வள்ளுவனின் கூற்றை,
"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை "
என்ற குறள் நமக்கு உணர்த்தும்.
       இக்கதையின் நாயகி மைதிலி வீணர்களின் வம்பால் வளமான வாழ்விலிருந்து வறுமைச் சூழலுக்குள் தள்ளப்பட்டு, அதிலிருந்து தத்தளித்துத் தடுமாறி தன் கணவன் நீலகண்டனுடன் நீந்திக் கரையேறி, தன்னை துச்சமாக எண்ணியவர்களே துதிபாடும் அளவிற்கு தன் கணவனுடன் புகழ் ஏணியில் ஏறி தலைநிமிர்ந்து நிற்கிறாள் - மேற்கண்ட வள்ளுவனின் வாக்கிற்கு விளக்கமாக.
        பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆனந்தவிகடனில் வெளிவந்த ஆயிரமாயிரம் அன்பு உள்ளங்களைக் கட்டிப் போட்ட கதை.
                (விலை : ரூ190)
                (பூங்கொடி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்