Posts

Showing posts from January, 2020

Motto

Image

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ தேசாந்திரி (எஸ். இராம கிருஷ்ணன்) ______________________________        சுதந்திரத்தோடு தேடல் மனம் கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு பயணப்படுதல் அவசியம்.        பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத் தன்மையும், கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.        ஆசிரியர், தன் பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.        சென்று வந்த இடங்களைப் பற்றி வெறும் பயணக் கட்டுரையாக இல்லாமல், எழுதும் போது அந்த இடம் குறித்த பல வரலாற்றுக் குறிப்புகள், அவ்விடங்களை அடையும் போது ஏற்படும் சிலிர்ப்புகள் போன்றவற்றை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். எண்ணச் சிதறல்களின் குவிப்பு! சிறந்த பயணப் பதிவு!!              (விலை : ரூ 275)               (தேசாந்திரி பதிப்பகம்)     

Criticize

Image

Happiness

Image

GK

"தங்கவாசல் நகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது? சான்பிரான்சிஸ்கோ  விளக்கம்: அமெரிக்காவில் இருக்கும் "சான்பிரான்சிஸ்கோ" நகரம் தான் “தங்க வாசல் நகரம்” என்ற சிறப்புப் பெயரைக் கொண்டு உள்ளது.

Book

தினம் ஒரு புத்தகம் ______________________________ அன்பே ஆரமுதே (தி.ஜானகிராமன்) _______________________________          தி.ஜ வின் புதினங்களில் மிகவும் ஜனரஞ்சகமானது.கதையோட்டத்தில் நிகழும் நிகழ்வுகள் எதிர்பாரா சுவாரஸ்சியத்தைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம்.        ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவு கொண்டு ஓடுகிறார்.சந்நியாசியாக அலைகிறார்.முப்பதாண்டுகளுக்குப் பின் அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார்.       இந்தக் காலஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும், உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது இப்புதினம்.       இளமையில் விலகிப் போன இருவர் முதுமையில் தம்பதியராகவும், பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் இருக்கும் அதிசயமே கதையின் மையம்.             (விலை : ரூ 150)             (ஐந்திணை பதிப்பகம்)

GK

"மரபியலின் தந்தை" என்று யாரை அழைப்பார்கள்? கிரிகர் மென்டல் விளக்கம்: "மரபியலின் தந்தை" என்று "கிரிகர் மென்டல்" அவர்களை அழைப்பார்கள்.

book

தினம் ஒரு புத்தகம் ____________________________ கறங்கு (நாஞ்சில் நாடன்) ____________________________         "கறங்கு " என்னும் சொலை இலக்கியங்களில் காணலாம். கறங்கு எனில் சுழற்சி, சுழல்தல் என்று பொருள்.        "தொல் குடி " தொகுப்புக்குப் பிறகு 2018 முடிய ஆசிரியர் எழுதிய 12 கதைகளும், கறங்கு என்னும் தொகுப்பாகிறது.        சமகால நடப்புகளின்மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும், கோபத்தையும், கையாலாகாத தன்மையால் தன் மீதான கழிவிரக்கத்தையும் எள்ளலும், சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கிறார் ஆசிரியர் இக்கதைகள் மூலம்.                (விலை : ரூ 90)                (தமிழினி பதிப்பகம்)

GK

"பொருளாதாரவியலின் தந்தை" என்று யார் போற்றப்படுகிறார்? ஆடம்ஸ்மித் விளக்கம்: "பொருளாதாரவியலின் தந்தை" என்று "ஆடம்ஸ்மித்" அவர்களைப் போற்றுகின்றனர்.

Book

தினம் ஒரு புத்தகம் _______________________________ மண்ணகத்துப் பூந்துளிகள் (ராஜம் கிருஷ்ணன்) _______________________________      பெண் குழந்தைகளின் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம் இது.      தாய்பாலுண்டு தவழ்ந்து வளர வேண்டிய பெண் சிசுக்களை எருக்கம் பாலிட்டு குழியில் போடும் அவலம் சமுதாயத்தில் நடந்ததை இப்புதினம் இடித்துரைக்கும்.        பெண் குழந்தைகளை மிகவும் பொறுப்புடன் வளர்க்க வேண்டியதிருப்பதால், பால் வேறுபாடு காட்டி பெண் பிறவி தவிர்க்கப்பட்டது என்ற சமூக உண்மையை மறைமுகமாகச் சுட்டுகிறார் ஆசிரியர்.        இவரது படைப்புகள் அனைத்திலும் சமூக அக்கறையும், பெண் நிலைப் பார்வையும் இழையோட்டமாக இருக்கும். வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் புதினம்.. வாசியுங்கள்... வாசிப்பை வாழ்க்கை ஆக்குங்கள்..                 (தாகம் பதிப்பகம்)

GK

"ஆங்கிலக் கவிதையின் தந்தை" என்று யாரை அழைப்பார்கள்? ஜியாஃப்ரி சாஸர் விளக்கம்: "ஆங்கிலக் கவிதையின் தந்தை" என்று "ஜியாஃப்ரி சாஸர்" அவர்களை அழைப்பார்கள்.

Book

தினம் ஒரு புத்தகம்  _______________________________ முனியாண்டி விலாஸ் (யுகபாரதி) ________________________________        கவிஞர் கவிதைகள் சீரான வேகத்துடன் தெளிந்த நதி போல நடப்பவை.       "முனியாண்டி விலாஸ் " என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இத்தொகுப்பு உலகமயமாக்கலுக்குப் பின் ஒரு சமூகம் தன்னை எத்தகைய நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விவரிக்கிறது.       இழந்து விட்ட தன்னுடைய விழுமியங்களை, இழந்து விட்ட தன்னுடைய மதிப்பீடுகளைப் பற்றிய கேள்வி எழுப்புகிறது .அனைவரும் விரும்பிப் படிக்கும் நூல் இது.               (விலை : ரூ 160)                (நேர்நிரை பதிப்பகம்)

GK

"அணுகுண்டின் தந்தை" என்று யார் அழைக்கப்படுகிறார்? ராபர்ட் ஓபன்ஹெய்மர்  விளக்கம்: "அணுகுண்டின் தந்தை" என்று "ராபர்ட் ஓபன்ஹெய்மர்" அவர்களை அழைப்பார்கள்.

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ மன்னர் மகள் (சாண்டில்யன்) _____________________________         72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்த வரலாற்றுப் புதினம் இது.        11 நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் ஆட்சிப் பின்னணியில், கங்கையை நோக்கிய படையெடுப்பு மற்றும் வேங்கி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை மையமாகக் கொண்ட புதினம்.       பல சரித்திர புதினங்களிலிருந்து சற்று மாறுபாடு கொண்ட புதினம். கற்பனை நயம் மிக்கது.      சிந்தனையையும், மதி நுட்பத்தையும் பற்றிய  விவரிப்புகளுமாக புத்தகப் பிரியர்களுக்கு சிறந்த நூல் இது.              (விலை : ரூ 400)               (வானதி பதிப்பகம்)   

GK

"வேதியியலின் தந்தை" என்று யார் அழைக்கப்படுகிறார்? ராபர்ட் பாயில்  விளக்கம்: "வேதியியலின் தந்தை" என்று "ராபர்ட் பாயில்" அவர்களை அழைக்கிறார்கள். 

Book

தினம் ஒரு புத்தகம் ______________________________ உரைகல் (தொ.பரமசிவம்) _______________________________        ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், பேட்டிகள், அணிந்துரைகள், உரைகள் ஆகியவை இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.        அழகான நடையில் சிறிய சிறிய சொற்றொடர்களில் கருத்துகளைப் புரிந்து கொள்ளும்படி விளக்கி உள்ளார்.        பேரக் குழந்தைகள் குறித்த கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு, நிகழ் காலத்தில் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளிடமிருந்து அந்நியப்பட்டு விட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.            (விலை : ரூ 130)            (கலப்பை பதிப்பகம்)

GK

"நகைச்சுவையின் தந்தை" என்று யாரை அழைக்கிறார்கள்? அரிஸ்டோபேனஸ் விளக்கம்: "அரிஸ்டோபேனஸ்" என்பவர் தான் "நகைச்சுவையின் தந்தை" என்று  அழைக்கப்படுகிறார்.

Mental health self care

Image

Words

Image

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ சூல் (சோ.தர்மன்) _____________________________           அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக் கொண்டது "சூல் " புதினம்.           வேளாண்மையோடு பின்னிப் பிணைந்த தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி ஆகியவற்றைப் பதிவு செய்கிறது இந்நூல்.          கண்மாயும், நீரும், வேளாண்மையுமே இப்புதினத்தின் முக்கிய பேசு பொருள்கள்.           ஒரே வாசிப்பில் முடிந்து விடும் அளவுக்கான எளிய மொழி நடை, இப்புதினத்தின் பலம். புதினம் எங்கும் கண்மாய் பலமுறை சூலின் வயிற்றோடு உவமை சொல்லப்பட்டுக் கொண்டே வரும்.          அதாவது ஆசிரியர் கூற விரும்புவது நீர் நிலைகளே இந்த உலகின் "உயிர் சுமக்கும் சூல் "  என்ற கருத்தாகும்.இக்கருத்தை இந்நூலை வாசிக்கும்போது வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ந...

GK

"மருத்துவத்தின் தந்தை" என்று யாரை அழைப்பார்கள்? ஹிப்போகிரட்டஸ் விளக்கம்: மருத்துவத்தின் தந்தை என்று "ஹிப்போகிரட்டஸ்" அவர்களை அழைப்பார்கள்.

Book

தினம் ஒரு புத்தகம் ________________________________ மரணவீடு (சத்யஜித் ரே) தமிழில்...வீ.பா.கணேசன்  _________________________________       கடலோர சொர்க்கமான பூரி நகரம், கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா.      ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்னும் முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்த முயல்கிறார் ஃபெலுடா.       அவரை முட்டாளாக்க நினைத்தவர்களின் கதி என்ன என்பதை சொல்கிறது மரணவீடு. மொழிபெயர்ப்பு புதினம் இது. விறுவிறுப்பான நடையில் வாசிப்பவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் புதினம் இது.            (விலை : ரூ 80)            (பாரதி புத்தகாலயம்)

Size of problem

Image

Away

Image

GK

"தமிழ்த் தாத்தா" என்ற சிறப்புப் பெயரைப் பெறுபவர் யார்? உ.வே. சாமிநாத அய்யர் விளக்கம்: உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

GK

"லோக்நாயக்" என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர் யார்? ஜெயப்பிரகாஷ் நாராயணன்  விளக்கம்: ஜெயபிரகாஷ் நாராயண் (அக்டோபர் 11, 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என அறியப்பட்டவர், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர் மற்றும் 1970 களில் இந்திரா காந்தியை எதிர்த்து போராடிய அரசியல் தலைவர். தமது அமைதியான முழு புரட்சி (Total Revolution) என்ற முழக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர்.1998 ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.1965ஆம் ஆண்டு தமது பொதுச்சேவைக்காக மக்சேசே பரிசு வழங்கப்பட்டது. இவர் "லோக்நாயக்" என்ற அடைமொழி கொண்ட சிறப்புப் பெயரையும் பெறுகிறார்.

GK

கரிகாற் சோழனின் வேறு பெயர் என்ன? திருமாவளவன்   விளக்கம்: கரிகாற் சோழனின் வேறு பெயர் "திருமாவளவன்" ஆகும்.

Book

தினம் ஒரு புத்தகம் _______________________________ கோபாலகிருஷ்ண கோகலே (மு.சீனிவாசன்) _______________________________        சுதந்திர இந்தியாவை நிர்மாணித்தவர்களில் முக்கியமானவர் கோகலே. மகாத்மா காந்தி இவரைத் தான் தன் குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.       கல்வி வளர்ச்சி தான் நாட்டை மேம்படுத்தும் என்ற கொள்கையோடு ஆசிரியர் பணியைச் செய்த கோகலே, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னுடைய குடும்பத்தையும் மறந்து பணியாற்றினார்.       இந்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் ஆங்கிலேயர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்தவர்.        இவரின் வாழ்க்கையைப் பற்றிய. சிறிய தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.               (விலை : ரூ 55)               (கங்காராணி பதிப்பகம்)

GK

கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர் யார்? நக்கீரர்  விளக்கம்: கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர் "நக்கீரர்" ஆவார். நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் இறையனார் அகப்பொருள் உரை ஆகும்.

Letters

Image

Book

தினம் ஒரு புத்தகம் _______________________________ மிதிலா விலாஸ் (லட்சுமி) ________________________________          இப்புதினம் "மிதிலா விலாஸ் " என்னும் மாளிகைக்குள் நடப்பதாகப் புனையப்பட்டுள்ளது.         தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாப்பாத்திரமாக்கி உள்ளார் ஆசிரியர்.         இப்புதினத்தில் வரும் தேவகி சிறந்த பாத்திரப் படைப்பு.ஆரம்பம் முதல் இறுதி வரை நம் அனுதாபத்திற்குரியவளாக உள்ளாள்.           மற்றொரு பாத்திரமான கிரிஜா பெண் குலத்திற்கே ஓர் எச்சரிக்கையாக அமைகிறாள். மற்றும் மைதிலி, தர்மாம்பாள், பசுபதி, ஈஸ்வரன் போன்ற கதாப்பாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது.               (விலை : ரூ 210)               (பூங்கொடி பதிப்பகம்)     

GK

மாமல்லன், வாதாபி கொண்டான் ஆகிய இவ்விரு பெயர்களும் யாருடைய சிறப்புப் பெயர்கள்? மகேந்திர வர்ம பல்லவன்  விளக்கம்: மாமல்லன், வாதாபி கொண்டான் ஆகிய  இவ்விரு பெயர்களும் "முதலாம் நரசிம்மவர்ம" பல்லவனின் சிறப்புப் பெயர்கள் ஆகும். 

வேடிக்கை மனிதர்கள்

தினம் ஒரு புத்தகம் ___________________________ வேடிக்கை மனிதர்கள் (வெ.இறையன்பு) ____________________________       ஆசிரியர் எதிர் கொண்ட அனுபவங்கள், கண்ணில் தென்பட்ட சில காட்சிகள் கூர்ந்து பார்த்து அவதானித்த சில சம்பவங்கள், மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சில நினைவுகள், கனவுகள் இவற்றை அனைத்தையும் சீராக வரிசைபடுத்தி முறையாக கோர்வை படுத்தி பொருத்தமான தலைப்பின்கீழ்,       நகைச்சுவையும் கலந்து மிகச் சிறப்பாக இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார்.       இவரால் மட்டும் எப்படி இத்துணை வேடிக்கை மனிதர்களை சந்திக்க முடிகிறது என்று வியப்பு எழும்.        விரிகின்ற நூலின் பக்கங்களை மூடும் போது நமது விழிகளும் புருவங்களும் வியப்பால் விரிகின்றன.              (விலை : ரூ180 )              (விஜயா பதிப்பகம்)

Kalikaatu ithikaasam

தினம் ஒரு புத்தகம் ______________________________ கள்ளிக்காட்டு இதிகாசம் (வைரமுத்து) _______________________________        கள்ளிக்காடு என்ற வறண்ட நிலத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையை எந்தவித அலங்காரப் பூச்சும் இல்லாமல் அப்படியே நம் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர்.       வாசிப்பவர்கள் நகரத்து சத்தங்களிலிருந்து விலகி கிராமத்து வாழ்க்கையில் நுழைந்து விடுவர்.      பேயத்தேவர், அவரது பேரன் மொக்கராசு, மகள்கள் செல்லத்தாய், மின்னல், மனைவி அழகம்மா இவர்களில் நாமும் ஒருவராகி விடுவோம்.          மண் சார்ந்த மக்கள் மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொல்லும் படைப்பு இது.       வட்டார வழக்கோடு எழுதப்பட்ட இப்புதினத்திற்கு 2003ஆம் ஆண்டு  சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.                (விலை : ரூ 200)                (திருமகள் பதிப்பகம்)

Mental health care

Image

Words

Image

you are best

Image

GK

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை எது? பிரித்வி விளக்கம்: அணு ஆயுத‌ங்களை சு‌ம‌ந்து செ‌ன்று எ‌தி‌ரிக‌ளி‌ன் இல‌‌க்கை தா‌க்‌கி அ‌ழி‌க்கு‌ம் ஏவுகணை வகையை சேர்ந்தது தான் பிருத்வி. இது இ‌ந்‌தியா‌வி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ந்த ஏவுகணை ‌மே‌ம்பா‌ட்டு தி‌ட்ட‌த்தா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது ஆகு‌ம்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை இதுவே. பிற்பாடு பிருத்வி 2, பிருத்வி மூன்று ஆகிய ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டது.

Understanding

Image

Words

Image

Ego

Image

GK

ஆங்கில அகராதியை உருவாக்கியவர் யார்? டாக்டர் ஜான்சன் விளக்கம்: அகரமுதலி அல்லது அகராதி (Dictionary) என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல். சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). இந்த நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு அகர வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்து வரை அகரவரிசை பின்பற்றப்படும். ஆங்கில அகராதியை முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர் ஜான்சன் என்பவர் தான்.

Analgesic

Image

Punctuality

Image

Descriptive vs Experimental

Image

Loneliness

Image

Good and bad

மூதுரை _______________ தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்கள் உறைப்பதுவுந் தீதே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் தீது. பொருள் _________________     தீக்குணம் உடையவரைப் பார்ப்பதும் தீயதே.தீயவருடைய பயனில்லாதச் சொல்லைக் கேட்பதும் தீயதே.தீயவருடைய தீய குணங்களைப் பேசுவதும் தீயதே. அத்தீயவருடன் நட்பு பாராட்டுதலும் தீயதே.

Qualitative methods

Image

Qualitative vs Quantitative Research

Image

Data collection

Image

Silence

Image

Loneliness

Image

Human

Image

Hurt

Image

Emotional state

Image

12.01.2020

அண்டார்டிகாவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த இந்தியர் யார்? ஜி. எஸ். சிரோஹி விளக்கம்: அண்டார்டிகாவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த இந்தியர் ஜி. எஸ். சிரோஹி ஆவார்.

Life skills

Image

Validity

Image

பொங்கல் விழா

Image

மாணவர்கள் படைப்பு

Image

Variables

Image