Kalikaatu ithikaasam

தினம் ஒரு புத்தகம்
______________________________
கள்ளிக்காட்டு இதிகாசம்
(வைரமுத்து)
_______________________________
       கள்ளிக்காடு என்ற வறண்ட நிலத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையை எந்தவித அலங்காரப் பூச்சும் இல்லாமல் அப்படியே நம் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
      வாசிப்பவர்கள் நகரத்து சத்தங்களிலிருந்து விலகி கிராமத்து வாழ்க்கையில் நுழைந்து விடுவர்.
     பேயத்தேவர், அவரது பேரன் மொக்கராசு, மகள்கள் செல்லத்தாய், மின்னல், மனைவி அழகம்மா இவர்களில் நாமும் ஒருவராகி விடுவோம். 
        மண் சார்ந்த மக்கள் மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொல்லும் படைப்பு இது.
      வட்டார வழக்கோடு எழுதப்பட்ட இப்புதினத்திற்கு 2003ஆம் ஆண்டு 
சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.
               (விலை : ரூ 200)
               (திருமகள் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்