Posts

Showing posts from March, 2020

GK

எந்த இனத்தில் ஆண் பறவை மட்டும் அடைகாக்கும்? நெருப்புக் கோழி இனம் விளக்கம்: தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி (Ostrich, Struthio camelus) வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது. தீக்கோழிகள் இயற்கையில், ஆபிரிக்காவின் பூமத்திய ரேகைக் காட்டு வலயங்களில், வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளிலுமுள்ள சவான்னாக்கள், அரைப் பாலைவனங்களில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு இனமான எஸ். சி. சிரியாக்கஸ் இப்பொழுது அழிந்துவிட்டது. மனிதர்களை தன் கால்களால்  மிதித்துக் கொள்ளும் பறவை இதுவே ஆகும். அது மட்டும் அல்ல, இந்த  இனத்தில் ஆண் பறவை மட்டுமே அடைகாக்கும்.

Book வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

தினம் ஒரு புத்தகம் _______________________________ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (ம.பொ.சி) ________________________________        மனித சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல்களை விரும்பிய சீர்திருத்தவாதி வள்ளலார்.        வள்ளலார், பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடிப்படையாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்னும் கட்டிடத்தை எழுப்பி, அதன் மேல் உயிர்க்குலத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் "ஆன்ம நேய ஒருமைப்பாடு "என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியை பறக்க விட்டவர்.          வள்ளலார் பயன்படுத்திய மூன்று வகையான ஒருமைப்பாட்டினை தெளிவுபடுத்தியதால் இந்நூலுக்கு  "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு " என்னும் பெயர் வைத்துள்ளார் சிலம்புச்செல்வர்.         இந்நூலை வாசிப்பவர்களுக்கு உண்மையான சமுதாய உணர்ச்சி தோன்றும்.இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.                    (விலை : ரூ 360)                 ...

GK

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது? தேரை விளக்கம்: தேரை அனுரா வரிசையின் பலவகை நிலநீர் வாழிகளின் இனங்களைக் குறிக்கும்.இவற்றிற்கும் தவளைகளுக்கும் இடையே வரண்ட சூழலிலும் வாழக்கூடிய வகையிலான தேரைகளின் உருவைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன. கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனைக் குறித்தப் பாடல் இவை வாழும் சூழலை எடுத்தியம்புவதாக உள்ளது. இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. இவை நச்சுத் தன்மை வாய்ந்தவை. மேலும் தாவுகின்ற தவளைகள் போலன்றி இவை கால்களைக் கொண்டு நடக்கின்றன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன. ஆனால் இவை இவ்வினத்தின் வரலாற்றைப் பாதிப்பதில்லை. உயிரியல் வகைப்பாடு ஓரினத்தின் வளரும் மாற்றங்களை மட்டுமே கருத்தில் கொள்வதால் தேரைகளும் தவளைகளும் ஒரே வகைப்பாட்டில் உள்ளன.

GK

கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள சத்து என்ன? புரதம் விளக்கம்: கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் புரதம் காணப்படுகிறது. அது மட்டும் அல்ல, உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கு தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் போன்றவையும் முட்டையில்  உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது முட்டையின் விலையும் குறைவு தான்.

QP

Image

Gk

உலக வனவிலங்கு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? அக்டோபர் 4 விளக்கம்: இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி  என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் உலக வன விலங்குகள் தினம் அக்டோபர் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

GK

புலியின் அறிவியல் பெயர் என்ன? பாந்திரா டைகரிஸ்  விளக்கம்: புலி (பாந்திரா டைகரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்திரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியதாகும். இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் கோட் சின்னங்களிலும் இடம்பெறுகிறது. விளையாட்டு அணிகளுக்குச் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் உள்ளது.தற்போது இவை அழிந்து வருகிறது.

Respect

Image

GK

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர் யார்? முத்துலட்சுமி ரெட்டி விளக்கம்: அடையாறு புற்றுநோய் மையம் (Adyar Cancer Institute) இந்தியாவின் சென்னை மாநகரில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார். 

GK

'முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்' எங்கு அமைந்து உள்ளது? நீலகிரி  விளக்கம்: 'முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்' நீலகிரியில் அமைந்து உள்ளது.

Book கருப்பு புத்தகம்

தினம் ஒரு புத்தகம் _______________________________ கருப்புப் புத்தகம் (ஓரான் பாமுக்) தமிழில்...எதிராஜ் அகிலன் ________________________________         ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது திறமையை, கலை நயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.        கதையின் முடிவில் புதிர் விடுவிக்கப்படவில்லை.இந்தத் திகைப்புதான் இந்நூலின் மிகப் பெரிய பலம்.      எதிரெதிராய் நிலை பெற்றிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்குள் சிறைப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்தும் களங்கமற்ற, குழந்தைத்தனமான குதூகலத்தை இப்புதினம் ஏற்படுத்தும்.                (விலை : ரூ 590)                (காலச்சுவடு பதிப்பகம்)

Book கொடி முல்லை

தினம் ஒரு புத்தகம் ______________________________ கொடிமுல்லை (வாணிதாசன்) ______________________________        கொடிமுல்லை, கவிஞரின் இயற்கை ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.        இயற்கை அழகை வெளிப்படுத்தவும், செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது.       பகுத்தறிவுப் பார்வையோடு  இக்காவியம் தொடங்குகிறது.உவமை, கற்பனை என்னும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் ஆசிரியர்.எளிதில் பொருள் புரியும்படியான வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் போன்ற நடை அமைப்பினை இக்காவியத்தில் காணலாம்.        காப்பியத் தலைவி, காப்பியத் தலைவனைவிட கூர்ந்த அறிவுடையவராகவும், செயல்திறன் மிக்கவராகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப் படுத்துவதே கவிஞரின் விருப்பம் என்பது தெளிவாகத் தெரியும்.                 (விலை : ரூ 30)                  (சீதை பதிப்பகம்)         

GK

கடலும் கடல் சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெய்தல் விளக்கம்: நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.

Book மூளைக்குள் சுற்றுலா

தினம் ஒரு புத்தகம் _____________________________ மூளைக்குள் சுற்றுலா (வெ.இறையன்பு) _____________________________        அறிவியல் தமிழுக்கு அணி சேர்க்கும் பிரமாண்டாமானப் படைப்பு.நமது உடம்புக்குள் உச்சியில் இருந்து கொண்டு ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் பேராற்றல் படைத்த மூளையைப் பற்றிய தகவல்களின் சுரங்கம்.         626 பக்கங்களில் 138 தலைப்புகளிலான கட்டுரைகள், வண்ணப் புகைப்படங்கள், விளக்கப் படங்கள் என அருமையான நூலாக வெளிவந்துள்ளது "மூளைக்குள் சுற்றுலா "       மூளை குறித்து தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்ற அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கெல்லாம் விரிவாக விளக்கம் அளிக்கும் வகையில் இக்கட்டுரைகள் உள்ளன.       மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கும் விளக்கங்களை வாசிக்கும்போது நாம் அறியாமை அகல்கிறது.       விஞ்ஞானத்தை வாழ்வியலுடன் இணைத்து நம் ஆளுகைக்கு வளமூட்டும் பாங்கு வாசிப்பனுபவத்திற்கு செழுமையையும், சுவையையும், வாழ்வியல் பண்பாட்டையும் நல்கி உள்ளன.        நம் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்டு நமக்கு பல அ...

Completion of work

Image

GK

'வரகு, சாமை' இந்த இரு தானியங்களும் எவ்வகை நிலத்துடன் தொடர்பு உடையது? முல்லை விளக்கம்: 'வரகு, சாமை' இந்த இரு தானியங்களும் முல்லை நிலத்துடன் தொடர்பு உடையவை.

Book நெற்றிக்கண்

தினம் ஒரு புத்தகம் ____________________________ நெற்றிக்கண் (நா.பார்த்தசாரதி) _____________________________        இப்புதினம், துணிச்சலும் நேர்மையும் மிக்க ஒரு பத்திரிகையாளரை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.          காதலித்த பெண் வேறு ஒருவரை மணந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் பத்திரிகை அலுவலகத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பாதிக்கப்பட்ட கதாநாயகன், அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதை  உணர்ச்சிப்பூர்வமாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.         புதின ஆசிரியரும், பத்திரிகை ஆசிரியராக இருந்த காரணத்தால், பத்திரிகை நடத்துவதில் உருவாகும் இடைஞ்சல்களையும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நேர்மையுடன் பணியாற்றுவதால் கிடைக்கும் மன அமைதியையும் ஆழமாகப் பதிவு செய்கிறார்.📕                    (விலை : ரூ 130)                    (பூம்புகார் பதிப்பகம்)     

Laugh

Image

Problem

Image

Life

Image

Book தெரு வாசகம்

தினம் ஒரு புத்தகம் ________________________________ தெரு வாசகம் (யுகபாரதி) ________________________________         வீதியே சொந்தமென்று கிடக்கின்ற சாமானியர்களுக்கானது இந்த "தெரு வாசகம் ".        இன்னும் எழுதப்படாமல் இருக்கின்ற மனிதர்களைப் பற்றிய பதிவு.நாம் தினமும் சந்திக்கின்ற, நமக்காக சுமையை சுமப்பவர்கள், நமக்காக நாற்றத்தை சுவாசிப்பவர்கள் இது போன்றவர்கள் தான் கவிதையின் நாயகர்கள்.         நிலவோடு சேர்ந்து நித்திரையைத் தொலைக்கும் கூர்க்கா, மஞ்சள் வெயில் உதிர உதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம், அந்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவன் இவர்களைப் பற்றி, ஒரு சிக்னலில் காத்திருக்கும் நேரம் கூட நாம் யோசிப்பதில்லை.  இவர்களே இந்நூலின் பாடு பொருள்கள்.📕                  (விலை : ரூ 65)                  (நேர்நிரை பதிப்பகம்)

Book தலைவர்கள் தேவை

தினம் ஒரு புத்தகம் ________________________________ தலைவர்கள் தேவை (நா.சங்கரராமன்) ________________________________        "வையத் தலைமை கொள் " என்பான் பாரதி.நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகம் சொந்தமானது.        நம் பிறப்பிற்கான மதிப்பைத் தேடி அலைவதிலும், அதற்கான உன்னதமான செயல்களைச் செய்வதிலுமே நம் வெற்றி அடங்கி உள்ளது.       "தலைவர்கள் தேவை " என்னும் தலைப்பிலான இந்நூல் ஆசிரியர் தம் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கும் தலைமை பற்றிய கனவுகளையும், அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்தான கட்டுரைகளை உள்ளடங்கிய தொகுப்பு.📕                  (விலை : ரூ 120)                  (விஜயா பதிப்பகம்)

GK

தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?  1937 விளக்கம்: தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி 1937 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leadership

Image

Book தொலைந்து போனவர்கள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ தொலைந்து போனவர்கள் (சா.கந்தசாமி) _______________________________        பள்ளி செல்லும் வயதில் நண்பர்களிடம் பலவகையான வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிந்தது.        வயது கூடக்கூட இந்த ஒருமை மாறி வேற்றுமைகளே பெரிதாகிப் போய்விடுகின்றன.நாளாக நாளாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பழகிய நண்பர்களை பிரித்து விடுகிறது. வெகு எளிமையானது போன்றதொரு கதையை வெகு எளிமையாகச் சொல்கிறார்.        தொலைந்து போனவர்கள் இன்றைய சமூகம் மற்றும் தனி மனிதனின் இறுக்கத்தைத் தூக்கிவாரிப் போடும்படி கண்முன் நிறுத்துகிறது.        ஒரு தலைச்சிறந்த புதினம் என்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய எதார்த்த உலகைத் துல்லியமாக உணர்த்தும் ஒளி இந்நூல்..📕                   (விலை : ரூ 150)                    (நற்றிணை பதிப்பகம்)

GK

எந்த ஜல சந்தி (Strait) தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கிறது? பாக் ஜலசந்தி  விளக்கம்: பாக் ஜலசந்தி தான் தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கிறது.

Life

Image

GK

24,30,60,72 மற்றும் 96 இதன் HCF மதிப்பு என்ன? 6 விளக்கம்: இதில் அதிக பொதுவான காரணி (The highest common factor is) 6 ஆகும்.

Book உயிர் பிழை

தினம் ஒரு புத்தகம் _____________________________ உயிர் பிழை (கு.சிவராமன்) _____________________________       புற்றுநோய் தாக்குதலிலிருந்து, நம் வாழ்க்கை முறையால் நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை பல தளங்களிலும் ஆராய்ந்து கூறுகிறார் மருத்துவர் சிவராமன் அவர்கள்.       "உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் நோய் காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம்." என்று எச்சரிக்கும் மருத்துவர் நோய் வராமல் தடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்நூலில் விளக்கி உள்ளார். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.                 ( விலை : ரூ 150)                 (விகடன் பிரசுரம்) 

GK

2/3, 3/4 மற்றும் 4/5 இதன் HCF மதிப்பை கண்டுபிடி? 1/60 விளக்கம்: HCF இன் தொகுதி எனக் கொள்ள HCF of numerators (2,3,4) = 1 ; LCM of denominators = LCM (3,4,5)=60 = 1/60 ஆகும்.

Courage

Image

Book குடும்ப விளக்கு

தினம் ஒரு புத்தகம் _________________________________ குடும்பவிளக்கு (பாரதிதாசன்) கமலா முருகன் அவர்கள் உரை.. __________________________________         குடும்பவிளக்கு ஐந்து பகுதியாக அமைந்த ஒரு இல்லற காவியம்.         ஒருவர் இல்வாழ்க்கைத் தொடங்கி முதுமை அடையும் வரையில் முக்கிய நிகழ்வுகளை வள்ளுவர் கண்ணோட்டத்தில் விரிவாக விளக்குகிறது.        வீட்டின் அன்றாட நிகழ்வுகள், விருந்தோம்பல், காதல், திருமணம், மகப்பேறு, முதியோர் காதல் என வாழ்க்கையின் கூறுகள் சிறப்பாக எடுத்து இயம்பப்பட்டுள்ளது.          இல்வாழ்க்கை முறையில் கவிஞர் கொண்ட ஈடுபாடு கனிந்து உள்ளக் கனியாக வெளிவந்துள்ளது இந்நூலில்.. இனிமையான, அழகிய, எளியநடையில் முனைவர் கமலா முருகன் அவர்களின் உரையில் தித்தித்கும் தெள்ளமுது இப்புத்தகம்..      முதியோர் காதல் _________________________ புதுமலர் அல்ல, காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு.. சதிராடும் நடையாள் அல்லள்.. தள்ளாடி விழும் மூதாட்டி.. மதியல்ல முகம் அவளுக்கு, வரள் நிலம், குழிகள் கண்கள்,  எது எனக்...

GK

3x +4, 7-2x மற்றும் 2x-11 ஆகிய இவைகளின் சராசரி மதிப்பு எவ்வளவு? x விளக்கம்: (3x+4+7-2x+2x-11)/3 = 3x/3 = x

Life

Image

GK

முதல் ஐம்பது முழு எண்களின் (whole numbers) சராசரி மதிப்பு (average) எவ்வளவு? 24.5 விளக்கம்: முதல் ஐம்பது முழு எண்களின் சராசரி மதிப்பு = 0+1+2+3+....+48+49 = 49*50/2. அதாவது சராசரி மதிப்பு (Average) = மொத்த கூட்டுத் தொகை/ 50 = 49/2 = 24.5 என்பதே சரியான விடை.

Happy

Image

Joy

Image

GK

1 முதல் 15 வரையிலான கூட்டு எண்களின் (composite numbers) சராசரி மதிப்பை (average) சொல்லுக. 9 விளக்கம்: 1 முதல் 15 வரையிலான கூட்டு எண்கள் முறையே 4, 6,8,9,10,12 மற்றும் 14 ஆகும். இதன் அடிப்படையில் கிடைக்கும் சராசரி மதிப்பு 63/7 = 9 ஆகும். எனவே இந்த 9 தான் விடை. 

Book Akbar

தினம் ஒரு புத்தகம் ______________________________ அக்பர் (என்.சொக்கன்) _______________________________        பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சிக்கு வந்தார். ஆட்சி நிறைவடையும் போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா மொகலாயப் பேரரசிடம் இருந்தது.        மிகச் சிறந்த போர் வீரராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் இருந்தார்.       எழுதப் படிக்க தெரியாதவர் என்ற போதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த இன்னொருவரைக் காண்பது அரிது.       முகலாய சாம்ராஜ்ஜியத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவை வடிவமைப்பதிலும் அக்பரின் பங்கு முக்கியமானது.ஒரு பேரரசரின் அசாதாரணமான வாழ்க்கை வரலாறு இந்நூல்.       அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது.                  (விலை : ரூ 90)                  (கிழக்கு பதிப்பகம்)

GK

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களுக்கு முன்னாள் எனது தாயாரின் வயது எனது வயதை விட மூன்று மடங்கு அதிகம். இரண்டு வருடங்களுக்கு முன்னாள் எனது வயதை விட அவர்களின் வயது இரண்டு மடங்கு அதிகம். எனில் எனது தாயின் தற்போதைய வயது என்னவாக இருக்கும்? 46 விளக்கம்: எனது வயதை x என்றும் எனது தாயாரின் வயதை y என்றும் கொண்டால் y-13= 3(x-13); y-2 = 2 (x-2) மேற்கண்ட சமன் பாட்டிற்கு தீர்வு கண்டால் Y = 46 ஆகும்.

Book சேற்றில் மனிதர்கள்

தினம் ஒரு புத்தகம் ____________________________ சேற்றில் மனிதர்கள் (ராஜம் கிருஷ்ணன்) ____________________________        உழவர் வாழ்வின் உழைப்பும், அவர்களின் நிலையும் எடுத்துக் காட்டப்படுகிறது.1982 இல் வெளிவந்த புதினம் இது.      வேளாண் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் எந்தெந்த வகையில் நிலம் உடைமையாளர் வர்க்கத்தால் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் புதினம் இது.        அடித்தள வர்க்கத்தை, மேல்தட்டு வர்க்கம் அமுக்கி அடக்குவது சித்தரிக்கப் பட்டுள்ளது.       உரிமை கேட்டுப் போராடும் பெண்களுக்கு, கற்பனையில் தீர்வுகளைக் கூறாமல் எதார்த்தமான முறையில் கதை மாந்தர்கள் மூலம் தீர்வுகளைக் கூறுகிறார்.         இப்புதினத்தில் இடம் பெறும் "காந்திமதி "அந்த வாழ்வின் முறைகளோடு ஒத்துப் போகாது எதிர்த்து நிற்கிறாள்.        தஞ்சை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்ட புதினம் இது. பாரதீய பாஷா பரிஷத் பரிசு, மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற புதினம் இது..       ...

GK

பொதுவாக ஒரு பொருளின் விற்ற விலை - அடக்க விலை என்பது என்ன? லாபம்  விளக்கம்: விற்ற விலை - அடக்க விலை என்பது லாபம் எனப்படும்.

Motivation

Image

GK

0.5, 0.55, 0.65, 0.8, ... 1 விளக்கம்: +0.05, +0.10, +0.15, +0.2 என்ற விதத்தில் தொடர் அமைந்து இருப்பதை நாம் இதில் காணலாம். அந்த வகையில் அடுத்து வர வேண்டிய எண் ஒன்றாகும்.

Book பண்ணையார் மகள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ பண்ணையார் மகள் (லட்சுமி) _______________________________        ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.         காலத்தால் குன்றாத, இளமை மங்காத, கற்பனை நயம் இருப்பதால் காலத்தால் நிலைத்து நிற்கின்றன இவரது படைப்புகள். உண்மை வாழ்க்கையின், தத்ரூபமான பிரதிபலிப்பை இக்கதையில் சித்தரித்து இருக்கிறார் ஆசிரியர்.கதைநாயகி உமா அனைவரின் மனதையும் கவர்கிறாள்.        அவலம், ஆனந்தம், அருவருப்பு எனப் பல்வேறு உணர்ச்சிகளை கற்பனை வளத்தோடு, உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் போது இலக்கிய நயத்தின் சுவை கெடாமல் கதையின் இளமை குன்றாமல் கதை எழுதி வாசகர்களின் மனதை மகிழ்விக்கிறார் ஆசிரியர்.                (விலை : ரூ 165)                (பூங்கொடி பதிப்பகம்)

Book திரு. வி. க. சொற்பொழிவுகள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ திரு.வி.க.வின் சொற்பொழிவுகள் (தமிழ்த்தென்றல்) _______________________________         தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவர் திரு.வி.க.அவர்கள்.        அவரின் இறுதிக் காலத்தில் ஆற்றிய சில சொற்பொழிவுகள், அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் நூல் வடிவில் தந்துள்ளனர்.        பொறாமை நீங்கி, மிகுபொருள் விரும்பாது, அருளொடும் அன்பொடும் வாழும்படி அறிவுறுத்துகிறார்.        இயற்கையோடு இயைந்த ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் தோய்ந்த வாழ்வின் நலத்தை உணர்த்துகிறார்."நல்லுணவு, நல்லுடல், நன் முயற்சி, நற்தொண்டு வேண்டும் "என வலியுறுத்துகிறார். அனைவரும் வாசித்து பயன் பெறத்தக்க அற்புதமான தகவல் களஞ்சியம் இந்நூல்.                  (விலை : ரூ 20)                  (முல்லை நிலையம்)

Book பல்லவ முரசு

தினம் ஒரு புத்தகம் _____________________________ பல்லவ முரசு (உதயணன்) _____________________________        சாளுக்கிய விக்கிரமாதித்தன், நந்திவர்மன் காஞ்சியில் இல்லாத போது அவரின் கோட்டையைப் பிடித்தான் எனவும், பின்பு நந்திவர்மன் வந்து மீட்டான் என்பது மட்டுமே வரலாற்றில் காணப்படுகிறது.        நந்திவர்மன் காலியாக விட்டுவிட்டு சென்று விட்டான் என்பதும், காலியாக இருந்த கோட்டையைச் சாளுக்கிய மன்னன் கைப்பற்றினான் என்பதும் கதை.         இரு மன்னர்களின் புகழுக்கும், சிறப்புக்கும் மாசு நேராத வண்ணமாய் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்..நவீனமே ..பல்லவ முரசு.பல்லவர் ஆட்சியை நினைவு படுத்தும் வகையில் புனைந்துள்ளார் ஆசிரியர்.                     (விலை : ரூ 150)                     (சீதை பதிப்பகம்)

Meeting

Image

GK

"அங்காரா" என்பது எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்? துருக்கி  விளக்கம்: அங்காரா துருக்கியின் தலைநகரம் ஆகும். 2007ல் மதிப்பீட்டின் படி இந்த நகரத்தில் 3,901,201 மக்கள் வாழ்கிறார்கள்.

GK

"ரியாத்" எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்? சவுதி அரேபியா  விளக்கம்: ரியாத் சவுதி அரேபியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரபிய மூவலந்தீவின் நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தில் 4.26 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.

Introduction

Image

GK

"ஒஸ்லோ" அல்லது "ஆஸ்லோ" எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்? நார்வே  விளக்கம்: ஒஸ்லோ நார்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

Success Failure

Image

Self

Image

Book Babasaheb Ambedkar

தினம் ஒரு புத்தகம் _______________________________ பாபா சாகேப் அம்பேத்கர் (சுப்ரமணியசிவம்) _______________________________        சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை, குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்த நூல் இது.64 பக்கங்களில், 14 தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.        அம்பேத்கர் பிறப்பு, படிப்பு 1907 இல்  மெட்ரிக் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுதல், திருமணம், மேற்படிப்புக்காக வெளிநாடு (அமெரிக்கா, லண்டன்)  செல்லுதல், 1923 இல் பம்பாய் திரும்புதல், வழக்கறிஞர் பணி, மாநில சபை உறுப்பினர், இந்தியாவின் சட்ட அமைச்சர் பதவி போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.         மாணவர்கள், சட்டமேதை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்த நூல் இது.                 (விலை : ரூ 30)                 (ஆப்பிள் பப்ளிகேஷஸ்)            

GK

தமிழில் வெளிவந்த முதல் மௌனத் திரைப்படம் எது? கீசகவதம் விளக்கம்: தமிழில் வெளிவந்த முதல் மௌனத் திரைப்படம் "கீசகவதம்" ஆகும். இந்தப் படம் 1919 இல் வெளிவந்தது.

Book அழகின் சிரிப்பு

தினம் ஒரு புத்தகம் _________________________________ அழகின் சிரிப்பு (பாவேந்தர் பாரதிதாசன்) __________________________________        பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, சங்கப் புலவர்களால் பெரிதும் பாடப் பெற்றுள்ளது.        நீண்ட நெடிய மரபினை நன்குணர்ந்த பாவேந்தர் இயற்கையின் (செடி, கொடி, ஆறு, மலை, கடல்...)எழிலைக் கண்டு உளமகிழ்ந்து இயற்றிய பாக்கள் தமிழிலக்கிய வரலாற்றில் சாகாவரம் பெற்றவை.       ஆங்கிலக்கவி வேர்ட்ஸ்வெர்த்தோடு பாவேந்தரை ஒப்பிடுவர்.அழகின் பன்முக நயங்களை எல்லோரும் படித்து மகிழ்வோம்.         அழகு ... "நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள். நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை."        தென்றல்..... "தமிழ்எனக் ககத்தும், தக்க தென்றல்நீ புறத்தும், இன்பம் அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ " "அழகின் சிரிப்பு ஒரு பூஞ்சோலை .. அழகின் சிரிப்பு ஒரு பழத்தோட்டம்.."                 (விலை : ரூ 20)                 (நாம் தமிழர...

Thinking

Image

Food

Image

Book பெண் மனம்

தினம் ஒரு புத்தகம் _____________________________ பெண் மனம் (லட்சுமி) ______________________________        " பெண் மனம் " ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான உள்ளங்களைப் பரவசப்படுத்தியது.         இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின மகளிர் மாண்புகளைக் கூற கண்ணகியைப் படைத்தார் இளங்கோ.        இருபதாம் நூற்றாண்டு ஆண்களோடு சமமாக வாழும் பெண்ணினத்தின் மனநிலையைப் புரிய வைத்துப் பெருமை சேர்க்க இப்புதினத்தில் சந்திரா என்ற கதாப்பாத்திரத்தைப் படைத்துள்ளார் ஆசிரியர்.        இப்புதினம் " இருவர் உள்ளம் " என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து வெற்றி வாகை சூடியது.         1962 ஆம் ஆண்டு, சென்னை மாநில அரசால் பரிசளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்நூல்.                  (விலை : ரூ 130)                  (பூங்கொடி பதிப்பகம்)

Book சேகுவேரா

தினம் ஒரு புத்தகம் _____________________________ புரட்சியாளர் சே குவேரா (பட்டத்தி மைந்தன்) _____________________________        சே குவேராவின் இளமைப்பருவம், மருத்துவப் படிப்பு,  வட அமெரிக்கா பயண முயற்சி, பல முயற்சிகள் மூலம் தங்களுடைய லட்சிய பூமியான பெரு நாட்டை அடைவதற்கு சே கு வும் அவருடைய நண்பரும் பாடுபட்டது போன்ற செய்சிகள் வாசிப்பவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.         மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தல், பின்னர் ஏற்பட்ட மாறுதல்கள், கலங்காது பணியாற்றிய சே குவேரா காங்கோவில் பெற்ற கசப்பான அனுபவங்கள், காங்கோ பயணத்தில் அவர் அடைந்த தோல்விகள், புரட்சியாளன் சே குவேராவின் உள்ளத் துணிவு போன்ற செய்திகள் அழகாக தொகுக்கப் பட்டுள்ளன.        சே குவேராவின் பொது வாழ்வு பற்றிய விசயங்கள் படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும்.கருத்துகள் நிரம்பிய அறிவுச் சோலை இந்நூல்..                   (விலை : ரூ120)                   (ராமையா பதிப்பகம்)    ...

Book எங்கிருந்து வருகிறதோ

தினம் ஒரு புத்தகம் ________________________________ எங்கிருந்து வருகுதோ (ரா.கி.ரங்கராஜன்) _________________________________         தான் அறிந்த மனிதர்கள், படித்த விசயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கியுள்ளார்.         அவருடன் பழகியவர்கள், அவர் அறிந்த மனிதர்கள், பத்திரிகைகளில் அவர் பணியாற்றிய போது நடந்த பல சுவையான தகவல்கள் ஆகியவற்றை அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு தந்துள்ளார்  கி.ரங்கராஜன் அவர்கள்.          ஆங்காங்கே குட்டிக் கதைகள் மூலம் தான் சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.          பொதுஅறிவுக்கு விருந்தாக அமைந்த இந்நூல் சுவாரசியம் மிக்கது.                     (விலை : ரூ 60)                     (விகடன் பிரசுரம்)

GK

தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் எது? ராஜ ராஜ சோழன்  விளக்கம்: ராஜா ராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் இதுவாகும். 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி இந்தப் படம் சாதனை படைத்தது.

Life

Image

GK

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 3D திரைப்படம் எது? மைடியர் குட்டிச்சாத்தான்  விளக்கம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 3D திரைப்படம் "மைடியர் குட்டிச்சாத்தான்" ஆகும்.

Book சதுரங்க குதிரை

தினம் ஒரு புத்தகம் ______________________________ சதுரங்கக் குதிரை (நாஞ்சில் நாடன்) ______________________________      திருமணம் ஆகாத, உறவுகளோடு ஒட்டாத, சொந்த ஊர்ப்பக்கம் ஒதுங்காத, தாய் தந்தை இழந்த நாராயணன் பரிதாபத்திற்கு உரியவன்.       கதை முழுக்க மும்பை, மற்றும் மகாராஷ்டிரா பக்கம் நடக்கிறது.பிளாஷ்பேக் நாகர்கோயில் பக்கம் வந்து போகிறது.        புதினம் முழுவதும் தனிமை, உறவுகள் தூரம் போகும் வெறுமை, விதவைகளை மறுமணம் செய்யவோ, விவாகரத்து செய்தப் பெண்களை மறுமணம் செய்யவோ மனம் வராத கொடுமை, அனுசரணையான அலுவலக சகாக்கள் என.. போகிறது கதை.       வாசிக்கும் போது புதினத்தின் காட்சிகள் கண்முன் விரிவடையும். நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.📕                   (விலை : ரூ 120)                   (விஜயா பதிப்பகம்)

Life

Image

Life

Image

GK

உலகில் தயாரிக்கப்பட்ட முதல் 3D படம் எது? Bwana Devil விளக்கம்: உலகில் தயாரிக்கப்பட்ட முதல் 3D படம் "பவனா டெவில் (Bwana Devil)" என்ற படம் தான்.

Book செம்பருத்தி

தினம் ஒரு புத்தகம் _______________________________ செம்பருத்தி (தி.ஜானகிராமன்) _______________________________         விழைவுக்கும், நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்ணணியில் வைத்து அலசும் புதினம் இது.          சாமான்யனான சட்டநாதன் எல்லோரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன.         குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள்.சாதாரண கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங்கலைஞன் சொல்ல முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்புதினம்.                  (விலை : ரூ 540)                  (காலச்சுவடு பதிப்பகம்)

Success

Image

Life

Image

GK

முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஆசிய நாடு எது? ஜப்பான் விளக்கம்: முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஆசிய நாடு ஜப்பான் தான். 1964 இல் அந்த நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது.

Book காகித ரெக்க

தினம் ஒரு புத்தகம் _______________________________ காகித றெக்கை (யுகபாரதி) _______________________________         வாசகர்களின் கவனத்தை ஈர்த்த கவிதைகள் காகித றெக்கை என்னும் தலைப்பில் தொகுக்கப் பட்டுள்ளன.         நவீன கவிதைகளின் அடையாளம் உள்ள இவர் கவிதைகள் வெகுஜன வரவேற்புக்கு உள்ளானவை.         கவிதைகளின் தற்காலத் தன்மைகளை உள் வாங்கிய கவிஞர் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்துள்ளார்.         மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை இவர் கவிதைகள் உணர்த்துகின்றன. வாசிப்பை சுவாசிப்போம்.. நேசிப்போம்.. வாழ்வை வளமாக்குவோம்..📕                 (விலை : ரூ 250)                 (நேர்நிரை பதிப்பகம்)

Respect

Image

GK

ரஷ்யா தேசத்தின் தேசிய விளையாட்டு எது? செஸ்  விளக்கம்: ரஷ்யா தேசத்தின் தேசிய விளையாட்டு செஸ் ஆகும்.