Book மூளைக்குள் சுற்றுலா

தினம் ஒரு புத்தகம்
_____________________________
மூளைக்குள் சுற்றுலா
(வெ.இறையன்பு)
_____________________________
       அறிவியல் தமிழுக்கு அணி சேர்க்கும் பிரமாண்டாமானப் படைப்பு.நமது உடம்புக்குள் உச்சியில் இருந்து கொண்டு ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் பேராற்றல் படைத்த மூளையைப் பற்றிய தகவல்களின் சுரங்கம்.
        626 பக்கங்களில் 138 தலைப்புகளிலான கட்டுரைகள், வண்ணப் புகைப்படங்கள், விளக்கப் படங்கள் என அருமையான நூலாக வெளிவந்துள்ளது "மூளைக்குள் சுற்றுலா "
      மூளை குறித்து தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்ற அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கெல்லாம் விரிவாக விளக்கம் அளிக்கும் வகையில் இக்கட்டுரைகள் உள்ளன.
      மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கும் விளக்கங்களை வாசிக்கும்போது நாம் அறியாமை அகல்கிறது.
      விஞ்ஞானத்தை வாழ்வியலுடன் இணைத்து நம் ஆளுகைக்கு வளமூட்டும் பாங்கு வாசிப்பனுபவத்திற்கு செழுமையையும், சுவையையும், வாழ்வியல் பண்பாட்டையும் நல்கி உள்ளன.
       நம் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்டு நமக்கு பல அதிசயங்களைக் காண்பித்துக் கொண்டும் வழிநடத்தியும் உடன் வருகிறார் ஆசிரியர்.
விஞ்ஞானத் தமிழ் உலகிற்கு குறிப்பிடத்தக்க மைல்கல் இந்நூல்.
            (விலை : ரூ 1500)
            (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்