Book சேற்றில் மனிதர்கள்
தினம் ஒரு புத்தகம்
____________________________
சேற்றில் மனிதர்கள்
(ராஜம் கிருஷ்ணன்)
____________________________
உழவர் வாழ்வின் உழைப்பும், அவர்களின் நிலையும் எடுத்துக் காட்டப்படுகிறது.1982 இல் வெளிவந்த புதினம் இது.
வேளாண் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் எந்தெந்த வகையில் நிலம் உடைமையாளர் வர்க்கத்தால் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் புதினம் இது.
அடித்தள வர்க்கத்தை, மேல்தட்டு வர்க்கம் அமுக்கி அடக்குவது சித்தரிக்கப் பட்டுள்ளது.
உரிமை கேட்டுப் போராடும் பெண்களுக்கு, கற்பனையில் தீர்வுகளைக் கூறாமல் எதார்த்தமான முறையில் கதை மாந்தர்கள் மூலம் தீர்வுகளைக் கூறுகிறார்.
இப்புதினத்தில் இடம் பெறும் "காந்திமதி "அந்த வாழ்வின் முறைகளோடு ஒத்துப் போகாது எதிர்த்து நிற்கிறாள்.
தஞ்சை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்ட புதினம் இது.
பாரதீய பாஷா பரிஷத் பரிசு, மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற புதினம் இது..
(தாகம் பதிப்பகம்)
Comments
Post a Comment