Book தெரு வாசகம்

தினம் ஒரு புத்தகம்
________________________________
தெரு வாசகம்
(யுகபாரதி)
________________________________
        வீதியே சொந்தமென்று கிடக்கின்ற சாமானியர்களுக்கானது இந்த "தெரு வாசகம் ".
       இன்னும் எழுதப்படாமல் இருக்கின்ற மனிதர்களைப் பற்றிய பதிவு.நாம் தினமும் சந்திக்கின்ற, நமக்காக சுமையை சுமப்பவர்கள், நமக்காக நாற்றத்தை சுவாசிப்பவர்கள் இது போன்றவர்கள் தான் கவிதையின் நாயகர்கள்.
        நிலவோடு சேர்ந்து நித்திரையைத் தொலைக்கும் கூர்க்கா, மஞ்சள் வெயில் உதிர உதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம், அந்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவன் இவர்களைப் பற்றி, ஒரு சிக்னலில் காத்திருக்கும் நேரம் கூட நாம் யோசிப்பதில்லை. 
இவர்களே இந்நூலின் பாடு பொருள்கள்.📕
                 (விலை : ரூ 65)
                 (நேர்நிரை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்