Book நெற்றிக்கண்

தினம் ஒரு புத்தகம்
____________________________
நெற்றிக்கண்
(நா.பார்த்தசாரதி)
_____________________________
       இப்புதினம், துணிச்சலும் நேர்மையும் மிக்க ஒரு பத்திரிகையாளரை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
         காதலித்த பெண் வேறு ஒருவரை மணந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் பத்திரிகை அலுவலகத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பாதிக்கப்பட்ட கதாநாயகன், அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதை  உணர்ச்சிப்பூர்வமாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.
        புதின ஆசிரியரும், பத்திரிகை ஆசிரியராக இருந்த காரணத்தால், பத்திரிகை நடத்துவதில் உருவாகும் இடைஞ்சல்களையும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நேர்மையுடன் பணியாற்றுவதால் கிடைக்கும் மன அமைதியையும் ஆழமாகப் பதிவு செய்கிறார்.📕
                   (விலை : ரூ 130)
                   (பூம்புகார் பதிப்பகம்)     

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்