Book குடும்ப விளக்கு

தினம் ஒரு புத்தகம்
_________________________________
குடும்பவிளக்கு
(பாரதிதாசன்)
கமலா முருகன் அவர்கள் உரை..
__________________________________
        குடும்பவிளக்கு ஐந்து பகுதியாக அமைந்த ஒரு இல்லற காவியம்.
        ஒருவர் இல்வாழ்க்கைத் தொடங்கி முதுமை அடையும் வரையில் முக்கிய நிகழ்வுகளை வள்ளுவர் கண்ணோட்டத்தில் விரிவாக விளக்குகிறது.
       வீட்டின் அன்றாட நிகழ்வுகள், விருந்தோம்பல், காதல், திருமணம், மகப்பேறு, முதியோர் காதல் என வாழ்க்கையின் கூறுகள் சிறப்பாக எடுத்து இயம்பப்பட்டுள்ளது.
         இல்வாழ்க்கை முறையில் கவிஞர் கொண்ட ஈடுபாடு கனிந்து உள்ளக் கனியாக வெளிவந்துள்ளது இந்நூலில்..
இனிமையான, அழகிய, எளியநடையில் முனைவர் கமலா முருகன் அவர்களின் உரையில் தித்தித்கும் தெள்ளமுது இப்புத்தகம்..
     முதியோர் காதல்
_________________________
புதுமலர் அல்ல, காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு..
சதிராடும் நடையாள் அல்லள்..
தள்ளாடி விழும் மூதாட்டி..
மதியல்ல முகம் அவளுக்கு,
வரள் நிலம், குழிகள் கண்கள், 
எது எனக்கு இன்பம் நல்கும்
"இருக்கிறாள் "என்பத தொன்றே..
                   (விலை : ரூ 120)
                   (சாரதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்