GK

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?

தேரை

விளக்கம்:
தேரை அனுரா வரிசையின் பலவகை நிலநீர் வாழிகளின் இனங்களைக் குறிக்கும்.இவற்றிற்கும் தவளைகளுக்கும் இடையே வரண்ட சூழலிலும் வாழக்கூடிய வகையிலான தேரைகளின் உருவைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன. கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனைக் குறித்தப் பாடல் இவை வாழும் சூழலை எடுத்தியம்புவதாக உள்ளது. இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. இவை நச்சுத் தன்மை வாய்ந்தவை. மேலும் தாவுகின்ற தவளைகள் போலன்றி இவை கால்களைக் கொண்டு நடக்கின்றன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன. ஆனால் இவை இவ்வினத்தின் வரலாற்றைப் பாதிப்பதில்லை. உயிரியல் வகைப்பாடு ஓரினத்தின் வளரும் மாற்றங்களை மட்டுமே கருத்தில் கொள்வதால் தேரைகளும் தவளைகளும் ஒரே வகைப்பாட்டில் உள்ளன.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்