Book

தினம் ஒரு புத்தகம்
_____________________________
சூல்
(சோ.தர்மன்)
_____________________________
          அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக் கொண்டது "சூல் " புதினம்.
          வேளாண்மையோடு பின்னிப் பிணைந்த தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி ஆகியவற்றைப் பதிவு செய்கிறது இந்நூல்.
         கண்மாயும், நீரும், வேளாண்மையுமே இப்புதினத்தின் முக்கிய பேசு பொருள்கள்.
          ஒரே வாசிப்பில் முடிந்து விடும் அளவுக்கான எளிய மொழி நடை, இப்புதினத்தின் பலம்.
புதினம் எங்கும் கண்மாய் பலமுறை சூலின் வயிற்றோடு உவமை சொல்லப்பட்டுக் கொண்டே வரும்.
         அதாவது ஆசிரியர் கூற விரும்புவது நீர் நிலைகளே இந்த உலகின் "உயிர் சுமக்கும் சூல் "  என்ற கருத்தாகும்.இக்கருத்தை இந்நூலை வாசிக்கும்போது வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.
              (விலை : ரூ 380)
              (அடையாளம் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்