Book - வில்லோடு வா நிலவே
தினம் ஒரு புத்தகம்
___________________________
வில்லோடு வா நிலவே
(கவிப்பேரரசு வைரமுத்து)
____________________________
வரலாற்றுப் புதினம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அரசாட்சி, போர் முதலியவை தான்.
ஆனால் அவற்றைச் சுருக்கி, இளவரசன் ஒருவனின் காதல் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி, அதனூடே சேரஅரசின் தடங்களைச் தொட்டுச் செல்கின்ற ஓடையாக உள்ளது கவிஞரின் இந்நூல்.
நூலின் தலைப்பே இதைச் சொல்லாமல் சொல்லும்.
சேரப்பேரரசு பரந்து விரிந்த காலக் கட்டத்தில் பயணமாகிறது கதைக்களம்.
சேரர்களுக்கும் கடம்பர்களுக்கும் இருந்த பகை, யவன அரேபிய நாடுகளுடன் இருந்த வணிகம், சேரநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பு ஆகியவற்றை அழகுடன் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார் கவிஞர்.
தமிழ் ஆளுமையும், கதையோட்டமும், வரலாற்றுக் குறிப்புகளும் பல கேள்விகளையும் தேடல்களையும் நமக்குக் கொடுக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
(விலை : ரூ 175)
(திருமகள் நிலையம்)
Comments
Post a Comment