Book - காசி ஆனந்தன் கவிதைகள்

தினம் ஒரு புத்தகம்
____________________________
காசி ஆனந்தன் கவிதைகள்
_____________________________
       ஈழம் தந்த வேழம் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.அவரின் தமிழ், தமிழ் உணர்வு பற்றிய பாடல்கள் கொண்ட தொகுப்பு இந்நூல்.
      இவருடைய பாடல் வரிகளில் புயலின் வேகத்தை, பூகம்பக் குலுக்கலை, எரிமலையின் சீற்றத்தை உணரமுடியும்.
     "கள மெனில் முழங்கி வரும் ஏறு!  -  தமிழன்
       கங்கு கரை பொங்கிவரும் ஆறு! "
      தமிழனின் ஆற்றலை இந்த இரு வரிகள் நன்குப் புலப்படுத்தும்.
     நூல் முழுவதுமே கவிதை வரிகள் போர்க்கோலம் பூண்டு வீரநடை போடுகின்றன.
எழுத்துகள் அல்ல ; ஈட்டிகள்!
வேல்கள்!
போர் வாட்கள்!
      அவருடைய கவிதைகள் தமிழரைப் புத்துணர்ச்சி கொண்டு எழச் செய்யும் மாமருந்து. 
சிந்தனை விருந்து ...
தெவிட்டா தெள்ளமுது...
"மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல
மானம் ஒன்றுதான் அடிப்படை!
வெறிகொள் தமிழர் புலிப்படை!  - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை! 
          

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்