Book - பட்டாம்பூச்சி

தினம் ஒரு புத்தகம்
_______________________________
பட்டாம்பூச்சி
(ரா.கி.ரங்கராஜன்)
________________________________
       ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறைக்கைதியால் பாப்பிலான் (பட்டாம்பூச்சி) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த சுயசரிதை புத்தகம்.ரா.கி.ரங்கராஜன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.
      சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு.சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை எதிர்கொண்டு அதை வெற்றி கொள்ளும் அவன் மனத்துணிவும், யாருக்கும் பணியாத.. அதே சமயம் யாரையும் பகைத்துக் கொள்ளாத சாமர்த்தியமும் படிப்பவரை வியக்க வைக்கும்.
        காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த காவியம்.
எத்தனை முறை படித்தாலும் சலிக்காது..
     தமிழிலும், மலையாளத்திலும் வெளிவந்த "சிறைச்சாலை " திரைப்படம் இப்புதினத்தின் தாக்கத்தைக் கொண்டதாகும்.
             (விலை : ரூ 400)
             (நர்மதா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்