Book- சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை
தினம் ஒரு புத்தகம்
_______________________________
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை..
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்..கௌரி கிருபாகரன்
_________________________________
ஆசிரியரின் அற்புதப் படைப்பான இந்நூல் பேசாத பேச்சிற்கு எவ்வளவு சிறப்பு என்பதை விளக்குகிறது அழகான கதைமூலம்.
கதை நாயகன் "சம்புமித்ரன் " தாயை இழந்தவன்.அக்காள் தங்கை இல்லாதவன்.தந்தையிடம் அதிகம் பேச தயங்குபவன்.அவன் நண்பர்கள் சந்திரன், அரெஸ்பா போன்று பெண்களிடம் சரளமாக பேசமாட்டான்.
திருமணத்தில் ஆர்வம் இல்லாமல், இறுதியில் ஒத்துக் கொள்கிறான். நண்பர்கள் கேலி செய்கின்றனர்.மனைவியிடம் பேசித்தானே ஆகவேண்டும் என்கின்றனர்.நாயகன் பதில் சொல்கிறான்...பிரச்னைக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் எதிர்பாராத விதமாக, நான் மனைவியாக தேர்ந்தெடுத்திருக்கும் பெண் ஊமை என்கிறான்.கீரவாணி, கல்யாணி, வராளி.. ராகம் எதுவானால் என்ன? கம்பி ஒன்றுதானே? அத்துடன் கதை முடிகிறது.
"பேசிய சொற்கள் உன்னை ஆட்சி செய்கின்றன.பேசாத சொற்களை நீ ஆட்சி செய்கிறாய் " என்ற அறிஞனின் கருத்தை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள்.
(விலை : ரூ 95)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment