Book- அரசூர் வம்சம்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
அரசூர் வம்சம்
(இரா.முருகன்)
______________________________
காலம் ஓயாதுமுன்னே சென்று கொண்டிருக்கும் அம்பைப் போன்றது.அதை தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.
இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி ஒடுக்கி முன்னும் பின்னும் ஓடச் செய்ய காலம் காலமாய் படைப்பாளிகள் முயன்று வருகிறார்கள்.."அரசூர் வம்சம் " அப்படி ஒரு முயற்சி.
கதையில் சூத்திரதாரியாக வரும் பனியன் சகோதரர்கள் காலத்தின் குறியீடுகள்.அவர்கள் முன்னும் பின்னும் ஓடி எதிர்காலத்தின் சின்னங்களை இறந்த காலத்தில் பதிக்கிறார்கள்.இறந்த கால நினைவுகளை நிகழ் காலத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.
வாழ்க்கையின் உயிர்தலுக்குக் காரணம் நினைவுகள் போடும் உணவே..இதை இந்தப்புதினத்தின் பக்கங்கள் வலியுறுத்துகின்றன.
(விலை : ரூ 500)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment