மூதுரை
மூதுரை
_________________
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யு மழை.
பொருள்
__________________
நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழியாகச் சென்று அங்கிருக்கும் புற்களுக்கும் பயனைத் தரும்.
பழமையான இவ்வுலகில், நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவருக்காக பெய்யும் மழையானது அனைவருக்கும் பயனைக் கொடுக்கும்.
Comments
Post a Comment