நகைச்சுவை

வாழ்க வளமுடன்! இனிப்பு,கசப்பு,புளிப்பு,கார்ப்பு,உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகள் உடலுக்கு இனிமை தரும். ஏழாவதான *நகைச்சுவை* மனதுக்கு இனிமை தரும்.
புன்னகை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
புன்னகையில் இருவகை 
1.விருப்பப்புன்னகை
2.அனிச்சைப் புன்னகை
 *விருப்பப் புன்னகை* நாம் 
விரும்பும் போது வலிந்து புன்னகை செய்வது இது.
இவ்வாறு செய்யும் போது கன்னத்தில் வாய்க்கு அருகில் உள்ள தசை (சைக்கோமேட்டிகஸ்)மட்டுமே இயங்கும்.
 *அனிச்சைப் புன்னகை*
இயல்பாக சிரிப்பது.
வாய்க்கு மேல் உள்ள தசை இயங்குவது மட்டுமல்லாமல் கண்களுக்கு கீழே உள்ள தசையும்(ஆர்பிகுலேரிஸ் ஆக்குலி) இயங்கும்.இது மூளையுடன் நேரடி தொடர்புடைய பகுதியாகும்.
அனிச்சைப் புன்னகை விருப்பப்புன்னகையை விடச் சிறந்தது.
சிரிப்பு நிறைய பிரச்சனைகளைத் தீர்த்துவிடும்.பறவைக்கு சிறகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனிதர்க்கு சிரிப்பு. சிரிப்பு மிகச் சிறந்த மருத்துவர் என்றே கூறலாம். 15 நிமிடம் சிரித்தால் ஒருவனுடைய ஆயுளில் 2 நாட்கள் கூடுகிறதாம்.
சிரிப்பை ஒரு உடற்பயிற்சி என்றே கூறலாம்.நாம் செய்யும் உடற்பயிற்சியிலும் சிரிப்பதால் வரும் பலன் உண்டு.எப்பயிற்சி என உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம். கண்பயிற்சி செய்யும் போது அனிச்சைப் புன்னகை செய்வதால் தூண்டப்படும் தசைப்பகுதி தூண்டப்படுகிறது.
சிரிப்பின் பயன்கள்:
1.சிரிப்பதால் கலோரி இழப்பு ஏற்படுகிறது.
2.இரத்த ஓட்டம் சீராகும்.
3. மூளைப் புத்துணர்ச்சி அடையும்.
4.ஆயுள் அதிகரிக்கும்.
 *நீங்கள் செய்ய வேண்டியது* 
"உங்கள் மனம் வலிக்கும் போது சிரியுங்கள்". இதனால் உங்களை உங்களுக்குப் பிடிக்கும். "பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வையுங்கள்". உங்களை எல்லோர்க்கும் பிடிக்கும்.
 நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா
அசனமாப்பேட்டை தவமையம்

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்