Book- தூர்வை
தினம் ஒரு புத்தகம்
___________________________
தூர்வை
(சோ.தர்மன்)
____________________________
இப்புதினத்தை வாசிக்கும் போது அந்தக் கதைக் களத்தில் கரிசல் காட்டின் வெம்மையும், நீர்மையும் நம் மேல் அப்பிக்கொள்ளும்.கதையில் நாம் மயங்கிக் கிடப்போம்.
கரிசல் பூமி, கந்தகபூமியான கதை .விவசாயத்தை விட்டு சம்சாரி, தீப்பெட்டித் தொழிற்சாலையின் காவலாளியாய் போனதை இயல்பாய், அழகாய், காட்டோடை போல சிலுசிலுத்து நம்மை ஈர்க்கும் கதை.
கதையைப் படித்து நெடுநாள் ஆனாலும், மினுத்தான் - மாடத்தி தம்பதிகள் நம் மனதைவிட்டு அகலுவதில்லை.
விவசாயக் குடும்பங்கள் மாடத்தில் அமர்ந்து கதையளப்பது, சிலம்பம் பழகுவது, ஒயில் கும்மியாடுவது, அதையும் தாண்டி நேர்த்திக்கடன் தீர்க்க, வண்டிகட்டி குடும்பம் குடும்பமாக போவது இதையெல்லாம் படிக்கும் போது காலம் மாறிப் போனதை எண்ணி மனம் ஏங்கும்.
வாசிக்க வாசிக்க கரும்புச்சாறு போல் ஈர்க்கும் சொல்நடை நம் மனதை மயக்கும்.மாற்றங்கள் எல்லாம் ஏற்றங்களை நோக்கி மட்டும் அல்ல என்று எண்ணினாலும், வாழ்க்கை என்னும் பெருநதி அடித்துப் போகின்ற போக்கில் நாமும் போகத்தான் வேண்டும்....
(விலை : ரூ 230)
(அடையாளம் பதிப்பகம்)
Comments
Post a Comment