Book மீண்டும் பெண் மனம்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
மீண்டும் பெண்மனம்
(லட்சுமி)
______________________________
ஆசிரியர் எழுதிய "பெண்மனம் " புதினம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது.
அப்புதினத்தின் தொடர்ச்சிதான் "மீண்டும் பெண்மனம் " புத்தகம்.பெண்மனம் புதினத்தில் ஜெகநாதன், சந்திரா ஆகிய இருவர் உள்ளங்களும் புரிந்து கொள்ளமுடியாது, நாளாக நாளாக இருவர் மனமும் ஒன்றுபடும்.
பெண்மனம் கதையில், சந்திராவின் உள்ளத்தை தந்தை கல்யாணராமரும், சித்தி பார்வதியும் அறிய முடியாமல் தவிப்பர்.
இந்த கதையில் தாய் சந்திரா, தந்தை ஜெகநாதன், காதலன் சுகுமார் மூவரும் வீணாவின் மனதை அறிந்து கொள்ள முடியாது தவிக்கிறார்கள்.
இரு தலைமுறையினரின் இடைவெளிகள், கலாச்சார வேறுபாடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
(விலை : ரூ 100)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment