மூதுரை

மூதுரை
______________________
கற்பிளவோடு  ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.

பொருள்
_____________________
    சிறு வேறுபாடு வந்தாலே சிறியோர் பிளந்து போட்ட கல்லைப் போல பிரிந்து விடுவர்.பெரியோர், பெரும் சினத்தால் பிரிந்தாலும் பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம் ஒருவர் எய்த அம்பில் நீரில் உண்டான வடுவைப் போன்றதே ஆகும்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்