book வந்தார்கள் வென்றார்கள்

தினம் ஒரு புத்தகம்
______________________________
வந்தார்கள்..வென்றார்கள்!
(மதன்)
______________________________
       ஜீனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த போது பலருடைய பாராட்டைப் பெற்ற தொடராக அமைந்தது.
      தைமூரின் படையெடுப்பு, பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினி இவர்களில் ஆரம்பித்து, பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பகதூர் ஷா வரை சொல்லப்பட்ட இந்த வரலாறு சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம் சிலிர்க்க வைக்கிறது.
      ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது. 
      இந்நூலில் ஆங்காங்கே நிகழும் உரையாடல்கள் மட்டும், இப்படித்தான் பேசியிருக்க முடியும் என்ற யூகத்தின் அடிப்படையில் கற்பனையில் எழுதியதாகவும், மற்றபடி ஒவ்வொரு வரியும் வரலாற்றில் உண்மையில் நடந்ததாக ஆசிரியர் கூறியுள்ளார்.
     இப்புத்தகத்தைப் வாசிக்கும் ஒவ்வொருவரும், வாசித்து முடிக்கும்வரை மொகலாய மன்னர்கள் காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.அதுவே இந்நூலின் வெற்றி!! 
                (விலை : ரூ 90)
                (விகடன் வெளியீடு)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்