GK
"தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்று இந்த ஊரை அழைப்பார்கள். அது எந்த ஊர்?
மதுரை
விளக்கம்:
"தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்று அழைக்கப்படும் ஊர் மதுரை தான்.
மதுரை (Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவதும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
Comments
Post a Comment