மூதுரை

🌱🎋🌱🎋🌱🎋🌱🎋🌱🎋                                

🌹மூதுரை
-------------

சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். (18)

தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினாலும், அதன் மதிப்பு 
மாறுவது இல்லை. அது தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதனால் யாதொரு பயனும் இல்லை. இதைப் போன்றே
சிறந்த பண்புடைய நன்மக்கள், சூழ்நிலை நிமித்தம் தாழ்ந்தாலும்,
அவர்கள் பண்புள்ளவர்களாகவே இருப்பர். ஆனால் பண்பற்றவர் தாழ்ந்தால் அவர்கள் குணம் மேலும் மோசமாகும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்