Book விண்ணும் மண்ணும்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
விண்ணும் மண்ணும்
(மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு)
______________________________
விண்வெளி விஞ்ஞானத்தின் தகவல் பொக்கிஷம் என்று கொண்டாடப்பட வேண்டிய வகையில் அமைந்த நூல் இது.
விண்வெளி விஞ்ஞானத்தின் சிக்கலான கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.
இந்திய மண்ணில் மண் சார்ந்தும், விண்ணோக்கியும் நடத்தப்படும் முக்கிய ஆய்வுகளையும், அவை தொடர்பான அறிவியல் சிந்தனைகளையும் இந்நூலில் காண முடியும்.
இந்தக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு இதழ்களில் எழுதப்பட்டிருந்த 13 கட்டுரைகளின் தொகுப்பும், ஆசிரியர் இருவர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பும் இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும்.
(விலை : ரூ 150)
(முரண்களரி பதிப்பகம்)
Comments
Post a Comment