Book பாரதியார் கவிதைகள்

தினம் ஒரு புத்தகம்
______________________________
பாரதியார் கவிதைகள்
______________________________
      தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர் பாரதியார்.தம் எழுத்துகளின் வாயிலாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
      இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.இவரின் சம காலத்தைய மனிதர்கள் காந்தி, திலகர், உ.வே.சா, .வ.ஊ.சி,. அரவிந்தர் ஆகியோர்.
       தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, ஒருமைப்பாடு குறித்த கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
       இவருடைய கவித்திறனை மெச்சி எட்டயபுரம் சமஸ்தானம், "பாரதி "என்ற பட்டம் வழங்கியது.
         பாரதி...
பைந்தமிழ் தேர் பாகன்..
சிந்துக்குத் தந்தை..
குவிக்கும் கவிதைக் குயில்..
நாட்டில்
கவிழ்க்கும் பகையை, கவிழ்க்கும் கவிமுரசு..
நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா.
காடு மணம் கமழும் கற்பூர சொற்கோ..
மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று..
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல் ..
  என்று பாவேந்தர், பாரதிக்கு பாமாலை சூட்டினார்.
                 (விலை : ரூ 200)
                 (சீதை பதிப்பகம்)   

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்