Book பாற்கடல்
தினம் ஒரு புத்தகம்
________________________________
பாற்கடல்
(வைரமுத்து)
_________________________________
குமுதம் இதழில் வெளிவந்த கவிப்பேரரசின் அற்புதமான கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல்.
வாழ்வியல், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல் என்ற பல பரிணாமங்களோடு இயங்குகிறது இந்தப் " பாற்கடல் " ..
பகுத்தறிவும், முற்போக்கும், மண் நேசமும், மனிதப் பிரியமுமே இந்த பதில்களின் அடிநாதம்.
கேள்வி - பதில்களில் ஒரு சில...
1.கேள்வி : காலையில் எழுந்ததும் கண்முன் படும் வாசகம் சொல்லுங்கள்?
பதில் : "நின்ற இடத்தில் நிற்க
வேண்டுமா? ஓடிக் கொண்டே இரு."
2.கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
பதில் : சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும். 1.சோறு, 2.அரிசி. 3.விதை நெல்.
சோறு : இன்றையத் தேவை.
அரிசி : நாளையத் தேவை.
விதை நெல் :எதிர்காலத் தேவை..
3.கேள்வி :யாரிடம் பேசினால் அனுபவம் கிடைக்கும்?
பதில் : ஓய்வு பெற்ற நீதிபதிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள், அரை வயதில் களமிழந்த அரசியல்வாதிகள், கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன், மூத்த சவரத் தொழிலாளி....
பலதரப்பட்ட கேள்விகளுக்கு கவிஞர் அளித்திருக்கும் பதில்கள் சிந்தனையைத் தூண்டுபவை.
(விலை : ரூ 150)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment