Book ருத்ர நேத்ரா
தினம் ஒரு புத்தகம்
_____________________________
ருத்ர நேத்ரா
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்...கௌரி கிருபாகரன்
______________________________
"ருத்ர நேத்ரா " என்ற தெலுங்கு புதினத்தை அதே பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார் கௌரி கிருபாகரன் அவர்கள்.
இந்நூலை படிக்கும் போது சில பக்கங்கள் மர்ம நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
கதாநாயகனை விரும்பும் மூன்று பெண்களையும் விரசம் இல்லாமல், வேறுபடுத்தியுள்ள பாங்கு அருமை.குழந்தைத்தனம் மிகுந்த வெகுளியாக ஒரு பெண்ணையும், ஏக்கமும், தனிமையும் நிறைந்த ஒரு பெண்ணையும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் உள்ள ஒரு பெண்ணையும் சித்தரித்தது நயம் மிக்கது.
பார்வையற்ற வளர்ப்புத் தங்கை, தன் அண்ணணின் நாட்டுப்பற்றுக்குத் தான் சிறிதும் குறைந்தவள் அல்ல என்பதை தன் செயலால் மெய் சிலிர்க்க வைக்கிறாள்.
பெண்மையை வேறுபடுத்தி எழுதிய விதம், நாட்டுப்பற்று, அஞ்சா நெஞ்சம்,தியாகம், இரக்கம் போன்ற நல்ல பண்புகளையும், சுயநலம், ஆணவம், அகம்பாவம் போன்ற தீயபண்புகளையும் உணர்த்துகிறார் ஆசிரியர். முத்தாய்ப்பாக, ஆசிரியர் உணர்த்த விரும்புவது "என்றும் நல்லதே வெற்றி அடையும்.தீமை தம்மையே அழித்துவிடும் " என்பதேயாகும்.
(விலை :ரூ 375)
(அல்லயன்ஸ் பதிப்பகம்)
Comments
Post a Comment