Book மருந்தென வேண்டாவாம்

தினம் ஒரு புத்தகம்
________________________________
மருந்தென வேண்டாவாம்
(மருத்துவர்.கு.சிவராமன்)
________________________________
       நவீன உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருகிறது.ஃபாஸ்ட் புட், சாக்ரீம், கலர், பதப்படுத்தப் பட்ட உணவுகளை உண்டு வந்த மக்கள் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பாரம்பரிய உணவு வகைககளைத் தேடியும், காய்கறி, கீரை உணவு வகைகளை நாடியும் வருகின்றனர்.
      அறுசுவை உணவின் முக்கியதுவத்தை விரிவாக விளக்குகிறது இந்நூல். காய்கறிகள், பழங்கள் இவற்றின் சத்துகளைக் கூறுவதோடு சிறு தானியங்களின் மகத்துவத்தையும், அவற்றின் சில வகை, செய்முறைகளையும் விளக்குகிறது.
      பின்விளைவுகள் அற்ற நலமுள்ள உணவு வகைககளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்தது என்றும் எடுத்துரைக்கிறது.
        இந்நூலை வாசிக்கும் இளைய தலைமுறையின் உணவு முறைகள், இனி சிறப்பாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
                   (விகடன் பிரசுரம்)
                   (விலை : ரூ 145)

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்