Book

தினம் ஒரு புத்தகம்
______________________________
ரோமாபுரி ராணிகள்
(அறிஞர் அண்ணா)
_______________________________
       இந்நூலில் சுமார் 15 கட்டுரைகள் உள்ளன.இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் ரோம் சாம்ராஜியத்தின் வெற்றிக்கொடி ஒரு காலத்தில் கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது.
       ரோம் நாட்டு வீரர்களின் குதிரைப்படையின் குளம்புகளின்கீழ் சிக்கிச் சிதைந்தவர்கள் எண்ணற்றவர்கள்.
       வீரத்தின் விளைநிலமான ரோமாபுரியில், ரோமாபுரி ராணிகள் பலர் (பாம்பேயா, லிவியா, புல்வியா, பாஸ்டினா, ஜீலியா...) போன்ற பலர் ஆடம்பர வாழ்விலும், சிற்றின்பத்திலும் ஈடுபட்டு அப்பதவிக்கு ஊறுவிளைவித்தனர்.நல்ல குணம் கொண்ட ராணிகளும் இருந்தனர்.
      இவர்களின் குணாதிசயங்களை அண்ணா அவர்கள் தமக்கே உரித்தான அழகிய நடையில் சொல்லியிருக்கிறார்.அண்ணாவின் எழுத்துகள் கற்போர் நெஞ்சை கவரக்கூடியவை.இந்நூலும் இதற்கு விதிவிலக்கல்ல.ரோம் வரலாற்றை அறிந்து கொள்ள வைக்கும் அற்புதமான நூல்..
                  (விலை : ரூ 80)
                  (சீதை பதிப்பகம்)     

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்