மூதுரை

மூதுரை
_________________
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத்- தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

பொருள்
____________________
      கற்க வேண்டியவற்றை முறைப்படி கல்லாதவன் ஒரு கவியைக் கற்றுக் கொண்டு சொல்லுதல்
காட்டில் உள்ள மயில், தன் அழகிய தோகையை விரித்து ஆட, அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது தன்னையும் மயிலாகவே நினைத்துக் கொண்டு  தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடுதலைப் போன்றது.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்