மூதுரை

மூதுரை
________________
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் 
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரு மாகா அதனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.

பொருள்
__________________
    தாழம்பூ இதழ்களினாலே பெரியதாக இருக்கிறது.மகிழம் பூ இதழ்கள் சிறியதாயினும் மணத்தினாலே இனிதாயிருக்கிறது.
கடல் பெரியதாயிருக்கிறது.
ஆயினும் அதிலுள்ள நீர், குடிக்கப் பயன்படாது.கடலின் அருகில் இருக்கும் சிறிய மணற்குழியில் இருக்கும் ஊற்றுநீர் குடிக்க உகந்த நீராகும்.அதனால் உருவத்தால் சிறியவர் என்று மதிக்காமல் இருக்க வேண்டா.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்