மூதுரை
மூதுரை
_______________
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே- விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.
பொருள்
________________
கயவர் கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல்லின் பிளவு போல திரும்ப சேரமாட்டார்.சிறப்புமிக்க சான்றோர்களின் கோபமானது வில்லைப் பிடித்து (அம்பினால்) நீர் பிளக்க எய்த பிளவுபோல (அப்போதே) நீங்கும்.
Comments
Post a Comment