மூதுரை

மூதுரை
_______________
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுளித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் 
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

பொருள்
_________________
   நீர் வற்றிய குளத்திலிருந்து நீங்குகின்ற நீர்வாழ்ப் பறவைகள் போல வறுமை வந்தபொழுது நீங்குவார் உறவினராகார்.
அந்தக் குளத்தில் உள்ள கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போல, வறுமை வந்தபோதும் நம்மைவிட்டு நீங்காது உடனிருப்பவரே உறவினராவர்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்