மூதுரை

மூதுரை
________________
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.

பொருள்
__________________
ஆழமான கடலின் நீரை அழுத்தும் படியாக அமிழ்த்தி அள்ளினாலும், ஒரு படி நீரானது நால் படி நீராகாது.
அதுபோல
தோழியே!  பெண்களுக்கு மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும் அவரவருடைய விதியின் பயனையே அடைவர்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்