மூதுரை

மூதுரை
______________________
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் ஆகார மானாற் போல்-பாங்கறியாப் 
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மே லிட்ட கலம்.

பொருள்
________________________
       வரிகளை உடைய வேங்கைப் புலியின் விடநோயை போக்கிய விட வைத்தியன், அப்பொழுதே அப்புலிக்கு இரையானாற் போல,
நன்றியில்லாத அற்ப அறிவினருக்கு செய்யப்பட்ட உதவி கல்லின் மேல் போடப்பட்ட மட்கலம் போல, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும் என்பதாகும்.

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்