மூதுரை

மூதுரை
___________________
அடக்க முடையர் அறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் 
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
   
பொருள்
____________________
     கொக்கானது, நீர் மடையினிடத்து ஓடுகின்ற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க, பெரிய மீன் வரும் வரையும் அடங்கி இருக்கும்.
அதுபோல அடக்கத்துடன் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி அவரை வெல்ல நினைக்க வேண்டியதில்லை..

Comments

Popular posts from this blog

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்